பெங்களூருவில் புதிய BPL தொழிற்சாலை! எலக்ட்ரானிக் உற்பத்தியில் புதிய பாய்ச்சல்!

By SG Balan  |  First Published May 28, 2024, 3:38 PM IST

இந்திய பிரிண்ட்டட் சர்க்யூட் போர்டு சந்தை 2024 முதல் 2032 வரை 18% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2032 க்குள் 20 பில்லியன் டாலரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்கும் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான பிபிஎல் பெங்களூரில் பிரிண்ட்டட் சர்க்யூட் போர்டுகளுக்கான (பிசிபி) புதிய உற்பத்திப் பிரிவை நிறுவியுள்ளது. இந்த உற்பத்தி விரிவாக்கம் பிரிண்ட்டட் சர்க்யூட் போர்டுகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பிரதிபலிக்கிறது.

இந்திய எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னோடியான பிபிஎல் லிமிடெட், பெங்களூரில் அதிநவீன பிரிண்ட்டட் சர்க்யூட் போர்டு (பிசிபி) உற்பத்திப் பிரிவை நிறுவுவதில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்துள்ளது. இந்த புதிய உற்பத்தி ஆலை இந்தியாவில் PCB சந்தையில் புரட்சியை ஏற்படுத்தவும், சிறப்பு மின்னணு சாதனங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தப் புதிய உற்பத்திப் பிரிவின் தொடக்கம் ‘மேக் இன் இந்தியா’ இயக்கத்திற்கு மத்திய அரசு அளிக்கும் ஊக்கத்தின் வெளிப்பாகவும் உள்ளது. கடந்த நிதியாண்டில், பிபிஎல் நிறுவனம், உற்பத்தி, தரம் மற்றும் தொழில் இணக்கத்தை மேம்படுத்தும் வகையில், தற்போதுள்ள ஆலையில் தானியங்கி இயந்திரங்களைப் புகுத்தி மேம்படுத்த ரூ.15 கோடி முதலீடு செய்தது.

இன்னொரு சம்பவம் உறுதி... மீண்டும் பெருந்தொற்று தவிர்க்கவே முடியாது! எச்சரிக்கும் பிரிட்டன் விஞ்ஞானி!

புதிய ஆலை உயர்தர PCB உற்பத்திக்கு 100 சதவீதம் பொருத்தமான தூய்மையான வசதிகளைக் கொண்டிருக்கிறது. PCB செயல்பாட்டிற்கு முக்கியமான நவீன பிளேட்டிங் லைன்களைக் கொண்டிருக்கிறது. சி.என்.சி. மூலம் கட்டுப்படுத்தப்படும் இயந்திரங்கள் பிசிபி தயாரிப்பில் துல்லியம் மற்றும் செயல்திறனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

மைக்ரோ-செக்‌ஷன் பகுப்பாய்வு, 500x வரையிலான நுண்ணோக்கிகள் ஆகியவை மூலம் பரிசோதிப்பதற்கான அதிநவீன சோதனை வசதிகளும் உள்ளன. பல்வேறு தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறன்களும் இந்த பிரமாண்டமான புதிய உற்பத்திப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது. 

1989ஆம் ஆண்டு முதல் பிசிபி உற்பத்தியில் பிபிஎல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜப்பானின் சான்யோவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய பிரிண்ட்டட் சர்க்யூட் போர்டு சந்தை 2024 முதல் 2032 வரை 18% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2032 க்குள் 20 பில்லியன் டாலரை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெண் வேடமிட்டு திருமணம் செய்துகொண்ட ஆண்! 12வது நாளில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

click me!