Lava Yuva 5G: துல்லியமான கேமரா... நீடித்து நிற்கும் பேட்டரி... லாவா யுவா 5G மொபைல் விரைவில் ரிலீஸ்!

By SG Balan  |  First Published May 28, 2024, 3:03 PM IST

லாவா வெளியிட்டுள்ள டீஸர் வீடியோவின்படி, இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டூயல் AI கேமராவையும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.


லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G) ஸ்மார்ட்போன் இந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து லாலா நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இந்தப் புதிய 5G ஸ்மார்ட்போன் மே 30ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மொபைலின் டீஸர் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

Lava Yuva 5G அமேசானில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனுக்காக அமேசான் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி (MediaTek Dimensity) சிப்செட் கொண்ட இந்த லாவா ஸ்மார்ட்போன் மே 30ஆம் தேதி மதியம் 12:00 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும்.

Tap to resize

Latest Videos

undefined

லாவா வெளியிட்டுள்ள டீஸர் வீடியோவின்படி, இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது. 50-மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டூயல் AI கேமராவையும் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவையும் கொண்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது.

பின்புற பேனலின் அடிப்பகுதியில் செங்குத்தாக அமைக்கப்பட்ட லாவா பிராண்டிங் உள்ளது. பின்புற பேனல் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது. 5G வசதியுடன் கூடிய இந்த புதிய லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியுடன் இரண்டு நாள் நீடித்திருக்க்ம பேட்டரி லைஃப் கொண்டது.

சமீபத்தில் Lava Yuva 5G மொபைல் குறித்த தகவல்கள் LXX513 என்ற மாடல் எண்ணுடன் லீக் செய்யப்படு வைரலானது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14 OS மூலம் இயங்கும் என்றும் 6GB மற்றும் 8GB RAM வேரியண்ட்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் அமேசான் இணையதளம் மூலம் இந்த மொபைல் ரூ.10,000 க்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு இந்த மொபைல் பொருத்தமான சாய்ஸ் என கேஜெட் வல்லுநர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

click me!