5G மொபைல் விலையைக் குறைத்த ஒன்பிளஸ்! OnePlus 11R இப்ப என்ன விலை தெரியுமா?

By SG Balan  |  First Published Mar 6, 2024, 5:10 PM IST

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா இணையதளங்களில் இந்தச் சலுகை கிடைக்கிறது. இந்த மொபைல் கேலடிக் சில்வர், சோனிக் பிளாக் மற்றும் சோலார் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.


சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 11R 5G ஆனது கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகமானது. இந்து இந்த பிரீமியம் 5G மொபைலுக்கு தற்போது பெரிய தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

கூடுதல் விலை குறைப்புக்கான வாய்ப்பாக வாடிக்கையாளர்களுக்கு வங்கி தள்ளுபடிகளையும் கொடுக்கிறது. OnePlus 11R 5G ஆனது மொபைல் Snapdragon 8+ Gen 1 SoC பிராசஸர் கொண்டது. 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5,000mAh பேட்டரியைக் உள்ளடக்கியது.

Tap to resize

Latest Videos

undefined

இப்போது OnePlus 11R 5G விலை ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.37,999 விலையில் விற்பனைக்கு உள்ளது. இதன் அறிமுக விலை ரூ. 39,999 ஆக இருந்தது. 16GB RAM + 256GB மாடலின் விலை ரூ. 44,999 யிலிருந்து ரூ.41,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இந்தியா இணையதளங்களில் இந்தச் சலுகை கிடைக்கிறது. இந்த மொபைல் கேலடிக் சில்வர், சோனிக் பிளாக் மற்றும் சோலார் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி, ஒன் கார்டு கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ மூலம் வாங்கினால் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி தரப்படுகிறது. EMI ஆப்ஷன் மாதம் ரூ.4,334 முதல் தொடங்குகிறது. அமேசான் நிறுவனம் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் ரூ.2,500 வரவேற்பு சலுகைகள் கொடுக்கிறது.

OnePlus 11R 5G ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான OxygenOS இயங்குதளத்தில் இயங்குகிறது. 6.74-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz அடாப்டிவ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

50 மெகாபிக்சல் Sony IMX890 முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றை உள்ளடக்கி பின்புற கேமரா தொகுப்பு உள்ளது. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

click me!