கிளாம்ஷெல் டிசைனில் புதிய ஹோனர் ஸ்மார்ட்போன்! மோட்டோ, சாம்சங் கதை முடிஞ்சுது!

By SG Balan  |  First Published May 22, 2024, 4:38 PM IST

சாம்சங், மோட்டோரோலாவின் கிளாம்ஷெல் மொபைல்களில் இருந்து இதனை வேறுபடுத்தும் முக்கிய அம்சம் கவர் ஸ்கிரீனாக இருக்கும். ஹானர் மேஜிக் வி ஃபிளிப் சூப்பர் லார்ஜ் கவர் ஸ்கிரீனுடன் வெளியாகும்.


மோட்டோரோலா ரேசர், சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் போல மடிக்கக்கூடிய ஃபிளிப் போன் ஒன்றை ஹோனர் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

மடிக்கும் வசதியுடன் கூடிய ஃபிளிப் வடிவமைப்பு கிளாம்ஷெல்  டிசைன் என்று அழைக்கபடுகிறது. ஹோனர் அறிமுகப்படுத்தும் இந்த வகை ப்ரீமியம் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. இந்த கிளாம்ஷெல் மொபைல் ஹானர் மேஜிக் வி ஃபிளிப் (Honor Magic V Flip) என்ற பெயரில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tap to resize

Latest Videos

undefined

சாம்சங், மோட்டோரோலாவின் கிளாம்ஷெல் மொபைல்களில் இருந்து இதனை வேறுபடுத்தும் முக்கிய அம்சம் கவர் ஸ்கிரீனாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹானர் மேஜிக் வி ஃபிளிப் சூப்பர் லார்ஜ் கவர் ஸ்கிரீனுடன் வெளியாகும் என்று சீன சமூக வலைத்தளம் ஒன்றில் தகவல் வெளியாகி இருக்கிறது.

ரூ.100 க்கு பதில் ரூ.8,75,000 மின் கட்டணம்! விவசாயிக்கு ஷாக் கொடுத்த ஈ.பி. பில்!

பெரிய கவர் ஸ்கிரீன் இருப்பதால் மொபைல் மூடப்பட்டிருக்கும்போதும் அதிக செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும். பயனர்கள் நோட்டிஃபிகேஷன்களைப் பார்க்கவும், நேரம் பார்க்கவும், மொபைலைத் திறந்து பார்க்கத் தேவையில்லை.

இந்த மொபைலின் சரியான வெளியீட்டு தேதி வெளியாகவில்லை. ஜூன் மாத தொடக்கத்தில் வெளியாக சாத்தியம் உள்ளது என்றும் சொல்லப்படுகிறது. இந்த மொபைல் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்றும் பின்னர் பிற நாடுகளிலும் கிடைக்கத் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹானர் மேஜிக் வி ஃபிளிப் கிளாம்ஷெல் டிசைனில் மொபைல் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆப்ஷனாக இருக்கும். கேஜெட் பிரியர்களை இந்த புதிய ஸ்டைலிஷ் வடிவமைப்பு கவரக்கூடும்.

இதற்கு முன் ஹானர் நிறுவனம் அண்மையில், ஹோனர் 200 லைட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் பெரிய 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் சிப்செட் மற்றும் 35W ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் கொண்ட 4,500mAh பேட்டரி ஆகிய அம்சங்களைக் கொண்டது. பிரான்சில் அதன் ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

விமானத்தில் ஸ்டாண்டிங்! இண்டிகோ விமானத்தில் நின்றுகொண்டே சென்ற பயணியால் பரபரப்பு!

click me!