எல்லா வேலையையும் AI செய்யும்... பொழுது போகாதவர்கள் தான் வேலை செய்வார்கள்!: எலான் மஸ்க்

By SG Balan  |  First Published May 28, 2024, 9:00 AM IST

"நீங்கள் பொழுதுபோக்காக ஒரு வேலையைச் செய்ய விரும்பினால் செய்யலாம். ஆனால் AI ரோபோக்களே அனைத்தையும் செய்துவிடும்" என்று எலான் மஸ்க் கருதுகிறார்.


எதிர்காலத்தில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரோபோக்களே பெரும்பாலான வேலைகளைச் செய்துவிடும் என்பதால், மனிதர்கள் விரும்பினால் வேலைக்குச் செல்லலாம் என்ற நிலை உருவாகும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

விவா டெக்னாலஜி 2024 நிகழ்ச்சியில் பேசிய டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் தான் இயங்கும் என்பதற்கு மிகவும் சாத்தியமான சூழ்நிலை உள்ளது என்று தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

"அநேகமாக நம்மில் யாருக்கும் வேலை இருக்காது" என்று கூறிய எலான் மஸ்க், "யாராவது எந்த வேலையையாவது செய்தால் அது அவர்கள் விருப்பமாகவே இருக்கும்" எனவும் குறிப்பிட்டார்.

ரொம்ப ஆபத்தான கேஜெட்ஸ்... இதெல்லாம் அமேசான்ல சர்வசாதரணமா கிடைக்குது!

அந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் அனைவருக்கும் உயர் வருமானம் இருக்கும், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு வேண்டிய எந்த சேவையையும் AI ரோபோக்கள் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் பொழுதுபோக்காக ஒரு வேலையைச் செய்ய விரும்பினால் செய்யலாம். ஆனால் AI ரோபோக்களே நீங்கள் விரும்பும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கிவிடும்" என்றும் எலான் மஸ்க் பேசினார்.

பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் பணியை விரைவில் AI செய்யத் தொடங்கிவிடும் என்றும் எலான் மஸ்க் சொல்லியிருக்கிறார். AI தொழில்நுட்பம் 30 கோடி வேலைகளைக் குறைக்கக்கூடும் என கோல்ட்மேன் சாக்ஸ் கணித்துள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் பொருளாதாரத்தைப் பொறுத்து அதன் தாக்கம் வேறுபட்டதாக இருக்கும் என்று கூறியுள்ளது. 

சிறந்த வட்டி விகிதத்துடன் வரி விலக்கும் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்புத் திட்டங்கள்!

click me!