ChatGPT பயன்படுத்தி ‘லவ் லெட்டர்’ எழுதும் இளசுகள்!

By Asianet Tamil  |  First Published Feb 13, 2023, 1:40 PM IST

இந்த காதலர் தினத்தன்று சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான இந்திய இளசுகள் ChatGPT பயன்படுத்தி லவ் லெட்டர் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14 வந்தாலே இளசுகளுக்கு கொண்டாட்டம், பழசுகளுக்கு திண்டாட்டம் தான். அந்த வகையில், இந்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர் தினத்தை எதிர்நோக்கி பல இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை, தொழில்நுட்பத்தை காதலில் உட்புகுத்தி காதலை வெளிப்படுத்த உள்ளனர். 

ஆம், அண்மையில் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தளமான ChatGPT மூலம் காதல் கடிதங்களை எழுத உள்ளனர். இது தொடர்பாக McAfee என்ற கம்ப்யூட்டர் செக்யூரிட்டி நிறுவனம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 'மாடர்ன் லவ்' என்ற தலைப்பில் ஒன்பது நாடுகளில், சுமார் 5 ஆயிரம் பேரிடம் AI, இன்டர்நெட் எந்தளவுக்கு அன்பையும் உறவுகளையும் மாற்றுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தது. 

Latest Videos

undefined

அதன்படி, இந்தியாவில் சுமார் 62 சதவீத ஆண்கள் ChatGPT மூலம் லவ் லெட்டர் எழுத திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 27 சதவீதம் பேருக்கு அவ்வாறு சாட் ஜிபிடி மூலம் உதவி பெற்றால், அது நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், 49 சதவீதம் பேருக்கு சாட்ஜிபிடி எழுதிய காதல் கடிதம் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இது தொடர்பாக McAfee தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஸ்டீவ் க்ரோப்மேன் கூறுகையில்,  "செயற்கை நுண்ணறிவு பிரபலமடைந்து வருவதால், குறிப்பாக ஆன்லைனில் உள்ள எவரும் எளிதில் அணுகும் வகையில் ChatGPT போன்ற கருவிகள் உள்ளதால், இயந்திரத்தால் அறிவால் உருவாக்கப்பட்ட தகவல்களை எளிதில் பெற முடிகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தை கொண்டாட யாரும் இல்லையா.. கவலை வேண்டாம்! உங்களுக்காகவே காத்திருக்கும் AI

சாட்பாட் மூலம் எழுதப்பட்ட லவ் லெட்டர்கள் கிட்டத்தட்ட அசல் மனிதர் எழுதிய கடிம் போல் உள்ளதாகவும், இன்னும் சொல்லப்போனால் எது AI எழுதிய கடிதம், எது மனிதரால் எழுதப்பட்ட கடிதம் என்று கடிதத்திற்கும் மனிதனால் எழுதப்பட்ட கடிதம் என்ற வித்தியாசத்தை 69 சதவீதம் பேருக்கு தெரியவில்லை. எந்த அளவுக்கு செயற்கை நுண்ணறிவு மனிதரை போலவே சிந்தித்து கடிதம் எழுதுவதாக கூறப்படுகிறது.

ChatGPT தளத்தில் தற்போதைக்கு பெரும்பாலான பகுதிகள் உட்புகுத்தப்பட்டு விட்டன. இதனால், கூகுளுக்குப் போட்டியாக சாட்பாட் வளர்ந்து வருகிறது. போட்டிகளை சமாளிக்கும் வகையில், கூகுள் நிறுவனமும் பார்ட் என்ற பெயரில் செயற்கை நுண்ணறிவு தளம் ஒன்றை மேம்படுத்தி வருகிறது.
 

click me!