
இந்தியர்களைக் குறிவைத்து முதலீடு தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட்டுவரும் 100-க்கும் மேற்பட்ட சீன இணையதளங்களை தடை செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
உள்துறை அமைச்சகம் சார்பில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு இந்த இணையதளங்களை உடனடியாக முடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு ஆகியவற்றிற்கு பாதகமானவையாகக் கருதப்படும் சுமார் 250 சீன அப்ளிகேஷன்களை தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சந்திரயான்-3 உந்தவிசைக் கலனை பூமியின் சுற்றுவட்டப்பாதைக்குக் கொண்டுவந்த இஸ்ரோ!
இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த TikTok, Xender, Shein, Camscanner உள்ளிட்ட பல சீன மொபைல் செயலிகள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த மொபைல் அப்ளிகேஷன்கள் பயனர்களின் முக்கியமான தரவுபளைச் சேகரிக்கும் அனுமதிகளைக் கோருவதாகவும், பெறப்பட்ட பயனர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்துவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், PUBG மொபைல் கேம் இந்தியப் பதிப்பு, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. போர் சண்டையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கேம் இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்தது. ஒரு வருடத்தில் 10 கோடி பயனர்களைக் கடந்தது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.