அமெரிக்க அதிபர் இவரு கிடையாது; சாட்ஜிபிடி சொன்ன பொய்யான தகவல் - சரிவு ஆரம்பமா?

Published : Jan 28, 2025, 03:15 PM IST
அமெரிக்க அதிபர் இவரு கிடையாது; சாட்ஜிபிடி சொன்ன பொய்யான தகவல் - சரிவு ஆரம்பமா?

சுருக்கம்

சாட்ஜிபிடி தற்போதைய அமெரிக்க அதிபரை ஜோ பைடன் என்று தவறாகக் கூறி வருகிறது. டொனால்ட் டிரம்ப் தான் தற்போதைய அதிபர், இரண்டாவது முறையாகப் பதவி வகிக்கிறார். சாட்ஜிபிடி போன்ற ஏஐ மாடல்களில் உள்ள பிழைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் இருக்கிறார். 47வது ஜனாதிபதியாகப் பணியாற்றுகிறார். 46வது ஜனாதிபதியாக தனது பதவிக் காலத்தை முடித்த ஜோ பைடனுக்குப் பிறகு, ஜனவரி 20, 2025 அன்று அவர் பதவியேற்றார். டொனால்ட் டிரம்ப் முன்னர் 2017 முதல் 2021 வரை 45வது ஜனாதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.

இதன் மூலம் நவீன வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு முறை பதவி வகித்த முதல் அமெரிக்கத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த விஷயமெல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் உலகின் மிகப்பெரிய ஏஐ தளமான சாட்ஜிபிடி அடிக்கடி தவறு செய்து வருகிறது.

நம்மில் பலரும் எதற்கு எடுத்தாலும், எந்தவொரு கேள்வியையும் சாட்ஜிபிடியிடம் கேட்டு பதிலை பெறுகிறோம். இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் யார்? என்ற கேள்விக்கு ஜோ பைடன் என்று தவறாக கூறி வருகிறது. சாட்ஜிபிடி கொடுத்த பதில் பின்வருமாறு, “தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆவார், ஜனவரி 20, 2021 முதல் 46வது ஜனாதிபதியாக பணியாற்றி வருகிறார்” ஆகும்.

இது தற்போது வரை அப்டேட் செய்யப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் உலக அளவில் பயன்படுத்தும் சாட்ஜிபிடி, தற்போது வரை சில தவறுகளை செய்து வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சாட்ஜிபிடிக்கு போட்டியாக சீன நிறுவனம் புதிய ஏஐ மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஏஐ துறையில் புதுமையான மாற்றங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

2023-ஆம் ஆண்டு, சீன குவாண்டம் ஹெட்ஜ் ஃபண்ட் தலைவராக உள்ள லியாங் வென்ஃபெங் தொடங்கிய நிறுவனம் டீப்சீக் (Deepseek) ஆகும். இந்த நிறுவனம் தற்போது டீப்சீக், ஆர்1, மற்றும் ஆர்1 ஜீரோ என்ற இரண்டு ஏஐ மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஆர்1 மாடல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது ஒரு வழக்கமான ஏஐ மாடலாகும். அதே நேரத்தில், இன்னும் செயல்பாட்டுக்கு வராத ஆர்1 ஜீரோ, தன்னிச்சையாக கற்றுக்கொள்ளும் (self-taught) திறனை கொண்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்களின் செலவினை விட குறைந்த, 6 மில்லியன் டாலர் மட்டுமே செலவில் டீப்சீக் ஏஐ வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி டீப்சீக் கூடிய விரைவில் முன்னணியில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரில் ‘தமிழ் மொழி’.. டேஷ்போர்டை அறிமுகம் செய்து தரமான சம்பவம்!

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

இனி ஜிமெயில் ஐடியை மாற்றலாம்.. கூகுள் சொன்ன நல்ல செய்தி..!!
ரூ.35,000 தள்ளுபடி.. Pixel 9 Pro XL வாங்க இதுதான் சரியான நேரம் பாஸ்.!