ChatGPTக்கு போட்டியாக களமிறங்கிய DeepSeek; டீப்சீக் என்றால் என்ன? எப்படி டவுன்லோட் செய்வது?

Published : Jan 28, 2025, 02:09 PM ISTUpdated : Jan 28, 2025, 02:19 PM IST
ChatGPTக்கு போட்டியாக களமிறங்கிய DeepSeek; டீப்சீக் என்றால் என்ன? எப்படி டவுன்லோட் செய்வது?

சுருக்கம்

ChatGPT க்கு போட்டியாக டீப்சீக் என்ற AI சப்போர்ட் செயலி களமிறங்கி உள்ளது. உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள டீப்சீக் செயலியை எப்படி டவுன்லோட் செய்வது? என்பது குறித்து பார்க்கலாம்.

உலகத்தை ஈர்த்த டீப்சீக் 

நவீன காலத்துக்கு ஏற்ப Artificial intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் பெருகி வருகின்றன. அந்த வகையில் சாட்பாட் (ChatGPT) உலகளவில் முன்னணியில் உள்ளது. உங்களுக்கு தேவையான அனைத்து தகவலக்ள், விவரங்களை சாட்பாட் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில், சாட்பாட்டுக்கு போட்டியாக டீப்சீக் (DeepSeek) என்ற AI செயலி களமிறங்கி உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த புதுமையான செயலி விரைவாக ஈர்க்கப்பட்டு, அமெரிக்க ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும்  சாட்பாட்டை விட டீப்சீக் செயலியை அதிகமானோர் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். டீப்சீக் என்பது தென்கிழக்கு சீனாவின் ஹாங்சோவை தளமாகக் கொண்ட ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு AI சாட்போட் ஆகும். இது லியான் வென்ஃபெங்கால் நிறுவப்பட்டது. 

கட்டணம் கிடையாது 

இப்போது ChatGPTவிட டீப்சீக் அனைவரையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் இதன் மலிவு விலை தான். அதாவது டீப்சீக்  மேம்பாட்டு செலவு  வெறும் 6 மில்லியன் டாலர் என்று அறிக்கைகள் கூறுகின்றன. தற்போது ​​டீப்சீக் R1 மற்றும் R1 ஜீரோ இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. பயனர்கள் R1 பதிப்பை உடனடியாக அணுகலாம். இதில் முக்கியமான விஷயமாக இப்போது டீப்சீக்கை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது. 

டீப்சீக் மூலமாக நீங்கள் எந்த வித கட்டணமும் இன்றி உங்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, பயணம், உணவுகள் என அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். டீப்சீக் செயலியை ஆப் ஸ்டோரில் இருந்தும் அல்லது chat.deepseek.com, https://chat.deepseek.com என்ற இணையதளத்தில் இருந்தும் நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

டீப்சீக் (DeepSeek) எவ்வாறு டவுன்லோட் செய்வது:?

* உங்கள் ஐபோனி App Store ஐத் திறக்கவும். 

* தேடல் பட்டியில் "DeepSeek" என தட்டச்சு செய்யவும். 

* பின்பு பதிவிறக்கத்தைத் தொடங்க Get பொத்தானைத் தட்டவும்

டீப்சீக் வலைத்தளம் மூலமாக அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது?

* முதலில்  chat.deepseek.com, https://chat.deepseek.com என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும். 

* உங்கள் Google கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையவும். 

* அங்கு ChatGPT களைப் போன்ற ஒரு இடைமுகத்தை  (interface similar) நீங்கள் காண்பீர்கள்.

* அங்கு நீங்கள் ஒரு உரையாடல் பெட்டியில்  (dialogue box) கேள்விகளைத் தட்டச்சு செய்து AI சாட்பாட்டிலிருந்து உடனடி பதில்களைப் பெறலாம்.
 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?