’அத்திப்பட்டி’ போல காணாமல் போன ஜோ பைடன்.. கூகுள் நிறுவனத்துக்கு வந்த சோதனை

Published : Jan 28, 2025, 01:30 PM ISTUpdated : Jan 28, 2025, 01:35 PM IST
’அத்திப்பட்டி’ போல காணாமல் போன ஜோ பைடன்.. கூகுள் நிறுவனத்துக்கு வந்த சோதனை

சுருக்கம்

கூகுள் தேடலில் அமெரிக்க அதிபர்களின் பட்டியலில் ஜோ பைடனின் பெயர் காணாமல் போனது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் இந்தத் தவறுக்கு டேட்டா பிழை என்று விளக்கம் அளித்துள்ளது. இந்தச் சம்பவம் கூகிள் போன்ற மேம்பட்ட அமைப்புகளில் கூட ஆட்டோமேட்டிக் அமைப்புகளில் அவ்வப்போது ஏற்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது.

பல முறை கூகுள் சர்ச்சைக்குரிய பதில்களை வழங்கியது. இதன் காரணமாக நிறுவனம் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது மீண்டும் ஒரு முறை கூகுள் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மறந்துவிட்டதால் இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. 

உலகின் மிகப்பெரிய தேடுபொறி என்று அழைக்கப்படும் சர்ச் என்ஜின் ஆன கூகுள், பல்வேறு தலைப்புகளில் தகவல்களை தருகிறது. மில்லியன் கணக்கான பயனர்கள் அன்றாடம் பயன்படுத்தும் தளமாகும். ஒரு தேடலுடன், பயனர்கள் கிட்டத்தட்ட எதையும் பற்றிய தரவை அணுகலாம். இருப்பினும், கூகுள் அதன் தேடல் முடிவுகளில் காட்டப்படும் சர்ச்சைக்குரிய அல்லது தவறான பதில்களுக்காக சில நேரங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. 

இதுபோன்ற ஒரு சமீபத்திய சம்பவம் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது. ஒரு பயனர் கூகுளில் அமெரிக்க அதிபர்களின் பட்டியலைத் தேடியபோது, ​​ஜோ பைடனின் பெயர் இல்லை என்பதைக் கண்டறிந்தபோது இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது.

ஜனவரி 20, 2021 முதல் ஜனவரி 20, 2025 வரை பைடன் அமெரிக்க அதிபராகப் பணியாற்றினார். ஆச்சரியப்படும் விதமாக, கூகுளின் தேடல் முடிவுகள் அவரது பதவிக் காலத்தைத் தவிர்த்து, டொனால்ட் டிரம்பை 45வது மற்றும் 47வது ஜனாதிபதியாக பட்டியலிட்டன. இது கூகுளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியது.

கூகுள் தனது அமைப்பில் உள்ள டேட்டா பிழையால் இந்தத் தவறு ஏற்பட்டதாகக் கூறி சர்ச்சையைத் தீர்த்தது. இந்தச் சிக்கல் உடனடியாகத் தீர்க்கப்பட்டாலும், இந்தச் சம்பவம் கூகிள் போன்ற மேம்பட்ட அமைப்புகளில் கூட ஆட்டோமேட்டிக் அமைப்புகளில் அவ்வப்போது ஏற்படும் குறைபாடுகளை நினைவூட்டுகிறது என்று டெக் துறையை சேர்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதேபோல ஓபன்ஏஐயின் சாட்ஜிபிடியிலும் இதே போன்ற குறைபாடு ஏற்பட்டது. கூகுள் சொன்னது போல சாட்ஜிபிடியும் ஒரு தவறு செய்தது. தற்போதைய அமெரிக்க அதிபர் யார் என்ற கேள்விக்கு ஜோ பைடன் என்று கூறியது. இது பேக் எண்ட்டில் உள்ள பிரச்னை என்று கூறப்பட்டுள்ளது.

ஏத்தர் ரிஸ்டா ஸ்கூட்டரில் ‘தமிழ் மொழி’.. டேஷ்போர்டை அறிமுகம் செய்து தரமான சம்பவம்!

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?