கூகுளில் இந்த 4 விசயத்தை மட்டும் தேடாதீங்க; அப்பறம் ஜெயில் தான்

Published : Jan 26, 2025, 03:30 PM IST
கூகுளில் இந்த 4 விசயத்தை மட்டும் தேடாதீங்க; அப்பறம் ஜெயில் தான்

சுருக்கம்

நமக்கு தெரியாத பல விசயங்களை நாம் கூகுளில் தான் தேடுகிறோம். ஆனால், கூகுளில் தேடவேக் கூடாத சில விசயங்களைத் தெரிந்துகொள்வோம்.

கூகுளில் தகவல் தேடுவது நமது வாழ்க்கையில் இன்றி அமையாத ஒன்றாக மாறிவிட்டது. வேலைக்கு ஆனாலும், சும்மா தெரிஞ்சுக்கணும்னாலும் கூகுள் தான் அனைவருக்கும் கை கொடுக்குது. அனைத்து கேள்விக்கும் கூகுளில் பதில் கிடைத்தாலும், சில தேடல்கள் ஆபத்தை ஏற்படுத்தலாம். உச்சபட்சமாக சிறைக்கு கூட போக வைக்கும். கூகுளில் தேடவேக் கூடாத 4 விஷயங்கள் இங்கே.

குண்டு தயாரிப்பது எப்படி?

குண்டு தயாரிப்பது எப்படி என கூகுளில் தேடுவதே ஒரு கிரிமினல் குற்றம். பாதுகாப்பு அமைப்பு இதையெல்லாம் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கிறது. குண்டு, ஆயுதம் இதெல்லாம் கூகிள்ல தேடவே கூடாது. உங்கள் சர்ச் ஹிஸ்டரி செக்யூரிட்டி ஏஜென்சி கண்ணில் பட்டா, சிறைக்கு போக வேண்டியதா வரும்.

குழந்தைகள் பாலியல் வீடியோக்கள்

குழந்தைகள், பருவ வயதுக்கு வராதவர்கள் இவர்களைப் பற்றிய பாலியல் வீடியோக்களைத் தேடுவதும் கிரிமினல் குற்றம். இதற்கும் கடுமையான சட்டம் உள்ளது. மாட்டிக்கொண்டால் 5 வருடம் முதல் 7 வருஷம் வரைக்கும் சிறைக்கு போக வேண்டியதா வரும்.

ஹேக்கிங் டுடோரியல்களும் சாஃப்ட்வேர்களும்

கூகுளில் ஹேக்கிங் டுடோரியல், ஹேக்கிங் சாஃப்ட்வேர் இவை பற்றி தேடுவதும் பிரச்சனையில் கொண்டு போய் விடும். ஹேக் செய்வது எப்படி என்று கூகுளில் தேடினால், பெரிய பிரச்சனையில் மாட்டிப்பீங்க. இதுக்கு கடுமையான தண்டனை உண்டு. சிறைக்கு போக வேண்டியதா வரும்.

பைரசி படங்கள்

பல பேர் கூகுளில் படம் பார்க்க, டவுன்லோட் பண்ண தேடுவாங்க. ஆனா, பைரசி படங்களைத் தேடுவதும், டவுன்லோட் செய்வதும் குற்றம். மாட்டிக்கொண்டால் 3 வருஷம் ஜெயில், 10 லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டியதா வரும்.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Venezuela Earthquake: நிலநடுக்கம் வருவதற்கு முன் காப்பாற்றிய ஆண்ட்ராய்டு போன்! வைரலாகும் CCTV வீடியோ
Best phones under 10000: ரூ.10 ஆயிரம் ரூபாயில் இவ்வளவு வசதியா? உடனே வாங்க வேண்டிய 4 ஸ்மார்ட்போன்கள்!