அடடே! WhatsApp-ல் இப்படி கூட வீடியோ அனுப்ப முடியுமா!!

By Dinesh TG  |  First Published Oct 31, 2022, 11:57 AM IST

வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு வீடியோ அனுப்பும் போது, ஆடியோவை மியூட் செய்து கூட அனுப்பலாம்.  இந்த அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இங்கே காண்போம்.
 


டெலகிராமுக்கு போட்டியாக உள்ள வாட்ஸ் அப் புது புது அப்டேட்களை கொண்டு வருகிறது. சென்ற வாரம் அதன் டெஸ்க்டாப் பீட்டா பயனர்களுக்காக ப்ளர் இமேஜ் ( Blur image ) என்ற புதிய அம்சத்தை வழங்கியது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் புகைப்படத்தை மற்றவர்களுக்கு ஷேர் செய்யும்போது குறிப்பிட்ட பகுதியையோ அல்லது முழு படத்தையோ மங்கலாக்கி கொள்ளலாம். 

இதேபோல் தற்போது மற்றொறரு அம்சம் வாட்ஸ்அப்பில் உள்ளது. இதற்கு முன்னர் நீங்கள் ஒரு வீடியோவை ஷேர் செய்யும்போது அதிலுள்ள ஆடியோ உங்களுக்கு தேவையில்லை என்றால் உங்களால் அந்த வீடியோவிலிருந்து ஆடியோவை அகற்ற முடியாது. 

Tap to resize

Latest Videos

ஆனால் தற்போது இதற்கு தீர்வாக ஒரு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் வழங்கி உள்ளது.  அதன்படி நீங்கள் ஆடியோவை மியூட் செய்து வெறும் வீடியோவை மட்டும் ஷேர் செய்து கொள்ளலாம். இதற்கு முன் சிலர் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தி இந்த அம்சத்தினை உபயோகித்தனர். ஆனால் இனி அது தேவையில்லை. இந்த புதிய அப்டேட்டின் மூலம் உங்கள் வீடியோவில் உள்ள ஆடியோவை மியூட் செய்து கொள்ளலாம்.

Instagram இல் உங்களை அன் ஃபாலோ செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டுமா?

வீடியோவை எப்படி மியூட் செய்வது ?

நீங்கள் யாருக்கு வீடியோவை ஷேர் செய்ய விரும்புகிறீர்களோ அவர்களது காண்டாக்டை க்ளிக் செய்து பின் நீங்கள் அனுப்ப வேண்டிய வீடியோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.  உங்கள் திரையின் இடது புறத்தில் உள்ள வால்யூம் ஐகானை  க்ளிக் செய்ய வேண்டும்.  

இப்படி செய்தால் வீடியோவில் உள்ள ஆடியோ மியூட் ஆகிவிடும். பின் ஷேர் செய்தால் நீங்கள் அனுப்பிய வீடியோவானது உங்கள் நண்பர்களுக்கு ஆடியோ இல்லாமல் சென்றடையும். அதாவது அவர்களால் வீடியோவிலுள்ள ஆடியோவை கேட்க முடியாது.
 

click me!