டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். நிர்வாகத்தை தான் கையில் எடுத்தவுடன் 4 உயர்அதிகாரிகளை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கினார்.
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கிற்கான ப்ளூடிக் குறியீட்டுக்கு மாதம் 20 டாலர்கள் வசூலிக்கப்பட்ட உள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பீட்டில் 1600 ரூபாயாகும். 90 நாட்களில் கட்டணம் செலுத்த தவறினால் ப்ளூடிக் பறிபோகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளரான , ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். நிர்வாகத்தை தான் கையில் எடுத்தவுடன் 4 உயர்அதிகாரிகளை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கினார். இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், சட்டஅதிகாரி விஜயா கடே, தலைமை நிதி ஆதிகாரி நெட் செகால் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். மேலும், ஊழியர்களையும் நீக்க முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க;- Elon Musk Twitter: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்: பராக் அகர்வால், விஜயா கடே நீக்கி அதிரடி
இந்நிலையில் டுவிட்டர் நிர்வாகத்தில் எலான் மஸ்க் அடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கிற்கான ப்ளூடிக் குறியீட்டுக்கு மாதம் 1600 ரூபாய் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். 90 நாட்களில் கட்டணம் செலுத்த தவறினால் ப்ளூடிக் பறிபோகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
பொதுவாக சினிமா பிரபலங்கள், அரசில்வாதிகள் உள்ளிட்டோரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் ப்ளூடிக் வசதி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- Donald Trump Twitter! மீண்டும் ட்விட்டரில் இணைந்தாரா டொனால்ட் ட்ரம்ப்? வைரலாகும் புதிய ட்வீட்