அடடே Telegram ஆப்பை இப்படி கூட பயன்படுத்தலாமா?

By Dinesh TG  |  First Published Oct 29, 2022, 3:31 PM IST

டெலிகிராம் ஆப்பை மெசேஜ் அனுப்புவதற்காக மட்டுமின்றி, இன்னும் பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். அதில் முக்கியமான இரண்டு பயன்பாடுகளை இங்குக் காணலாம்.
 


வாட்ஸ்அப் என்பது அனைவரும் அறிந்த சேட்டிங் தளமாகும்.  ஆனால் இதன் போட்டி நிறுவனமான டெலகிராம் பல ஆப்களின் தொகுப்பு என்றே சொல்லலாம். பல ஆப்கள் செய்யும் வேலையை இந்த ஒரே ஆப் செய்கிறது. இந்த டெலகிராமில் ஏராளமான பயன்கள் உள்ளன.  அவற்றில் முக்கியமான இரண்டு:

1. காலண்டராக பயன்படுத்தலாம் :

Tap to resize

Latest Videos

டெலகிராமினை காலண்டராக பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமானவர்கள், உறவினர்கள் அல்லது உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் மெசேஜினை குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஷேர் செய்ய விரும்பினால், அதை செடியூல் செய்யும் அம்சம் இதில் உள்ளது. இதன் மூலம் நீங்கள் செட் செய்யும் நாளில், நேரத்தில் அந்த மெசேஜ் அனுப்பப்படும். 

இதற்கு முதலில் நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டியவரின் சேட்டிங் பக்கத்திற்கு செல்லவும். அதில் நீங்கள் செய்யவேண்டிய மெசேஜை டைப் செய்து என்டர் பட்டனை லாங் பிரஸ் செய்யவும். அதில் schedule message, , Send without sound என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். அதில் schedule message என்பதை தேர்வு செய்யவும். அதில் நீங்கள் அனுப்பவேண்டிய தேதி மட்டும் நேரத்தை பதிவு செய்து கொள்ளவும். பின் நீங்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அந்த மெசேஜ் தானாக அவர்களுக்கு சென்று விடும்.

Instagram இல் உங்களை அன் ஃபாலோ செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டுமா?

2.மெசேஜில் குறிப்பிட்ட வார்த்தையை மறைத்துக் கொள்ளலாம் :

நீங்கள் மெசேஜ் அனுப்பும் போது, அதில் குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் மறைத்துக் கொள்ளலாம்.இதற்கு முதலில் நீங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்து நீங்கள் மறைக்க விரும்பும் வார்த்தையை லாங் பிரெஸ் செய்து கொள்ளவும். இவ்வாறு செய்த பின் கட், காப்பி, ஸ்பாய்லர், போல்டு என நான்கு ஆப்ஷன்கள் இடம் பெரும். அதில் ஸ்பாய்லர் ( Spoiler ) என்பதை தேர்வு செய்யவும்.

பின் என்டர் பட்டனை க்ளிக் செய்து அதனை ஷேர் செய்யவும். இதன் பிறகு நீங்கள் அனுப்பிய மெசேஜில் அந்த குறிப்பிட்ட வார்த்தை மறைக்கப்படும். அந்த வார்த்தையினை அவர்கள் க்ளிக் செய்து பார்த்தால் மட்டுமே அதன் மெசேஜ் எதிர்முனையில் உள்ளவர்களுக்கு தெரியும். 

click me!