எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க... UPI மோசடியில் இருந்து தப்பிய மும்பை பெண் எச்சரிக்கை!

By SG BalanFirst Published Jan 6, 2024, 3:16 PM IST
Highlights

சம்பவத்தை விவரித்திருக்கும் மும்பை பெண்மணி, EPFO ​​இணையதளத்தில் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய முயற்சி செய்த சிறிது நேரத்தில் மோசடிக்காரரிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எல்ஐசி (LIC) பெயரைச் சொல்லிப் பேசிய நபர் ஒருவர் தன்னிட்டம் UPI பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட முயன்றதாக மும்பையைச் சேர்ந்த பெண் புகார் கூறியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த தமன்னா என்ற பெண் ட்விட்டரில் தான் எதிர்கொண்ட மோசடி முயற்சி குறித்து விரிவான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அந்தப் பெண், தனது பெற்றோரைப் பார்க்கச் சென்றபோது மோசடி செய்பவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டதாகச் சொல்லி இருக்கிறார். "சமீபத்தில் யாரோ ஒருவர் UPI மூலம் என்னை ஏமாற்ற முயன்றார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தந்தையிடமிருந்து தனது எண்ணைப் பெற்றதாகக் கூறிக்கொண்டு ஒருவர் போனில் பேசினார். அந்தப் பெண்ணை பேட்டா (குழந்தை) என்று அழைத்துப் பேசிய அவர், பெண்ணின் தந்தைக்கு ரூ.25,000 LIC பணத்தை அனுப்ப வேண்டும் என்று கோரினார். ஆனால் பெண்ணின் தந்தை ஆன்லைன் பேமெண்ட் வசதியை பயன்படுத்துவதில்லை என்பதால், அந்தத் தொகையை அந்தப் பெண்ணுக்கு அனுப்புவதாகச் சொல்லியிருக்கிறார்.

Aditya L1: ஆதித்யா எல்1 என்றால் என்ன? என்ன மாதிரியான ஆய்வுகளை இந்த விண்கலம் மேற்கொள்ளும்!!

Omg guys, someone recently tried to scam me with UPI.

I was at my parents'. My dad and I had just discussed about maturing investments and what to do next with it.

He had just left the house.

I get a call from some guy who said he got my number from my dad...

— Tamanna (@itssynecdoche)

அடையாளம் தெரியாத நபர் கூறியதை நம்பி அந்தப் பெண்  உதவ ஒப்புக்கொண்டார். பிறகுதான் அந்த மர்ம நபர் தனது வேலையைக் காட்டியுள்ளார். பணம் அனுப்பும்போது ரூ.5,000க்குப் பதில் ரூ.50,000 தவறுதலாக அனுப்பிவிட்டதாகத் தெரிவித்து, ரூ.45,000 தொகையைத் திரும்ப அனுப்புமாறுக் கோரினார்.

அப்போதுதான் அந்தப் பெண்ணுக்குச் சந்தேகம் வந்தது. பெண்ணின் மொபைலுக்கு பணம் அனுப்பியதாக மெசேஜ் மட்டுமே வந்திருக்கிறது. ஆனால், பணம் செலுத்தப்படவில்லை. இதைக் கூறியபோது அந்த நபர், பணம் அனுப்பிய ஸ்கிரீன்ஷாட்டைப் பார்க்க வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். தனது தந்தை திரும்பி வந்ததும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவிடலாம் என்று அந்தப் பெண் பதில் கூறியுள்ளார். மிரண்டுபோன அந்த நபர் இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

இந்த சம்பவத்தை விவரித்திருக்கும் மும்பை பெண்மணி, EPFO ​​இணையதளத்தில் ஆதார் விவரங்களைப் பதிவு செய்ய முயற்சி செய்த சிறிது நேரத்தில் மோசடிக்காரரிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பாராத அழைப்புகள் அல்லது நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் பேசும்போது விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் தெளிவான உதாரணமாக இருக்கிறது.

2024ல் அலப்பறை கிளப்பப் போகும் டாடாவின் நான்கு புதிய எலெக்ட்ரிக் கார்கள்!

click me!