ஒரு ஆதார் கார்டு மூலம் எத்தனை சிம் கார்டு வாங்கலாம்? மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

By SG Balan  |  First Published Dec 23, 2023, 2:44 PM IST

ஒரு ஆதார் அட்டையில் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருந்தால், ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.


சைபர் கிரைம் வழக்குகள் அதிகரித்து வருவதால், சிம் கார்டுகளில் அரசின் விதிமுறைகள் மிகவும் கண்டிப்பானவையாக உள்ளன. புதிய சிம் கார்டுகளை வாங்குவது தொடர்பாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் லூதியானாவில் கூரியர் மூலம் 198 சிம்கார்டுகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட, குர்தாஸ்பூரைச் சேர்ந்த அஜய் குமார் (30), அந்த சிம் கார்டுகளை ஆடைகளுக்குள் மறைத்து வைத்து கம்போடியாவுக்கு அனுப்ப முயன்றுள்ளார்.

Latest Videos

undefined

பார்சலை ஸ்கேன் செய்து பார்த்த கூரியர் நிறுவன ஊழியர்கள், உள்ளே சிம் கார்டுகள் இருப்பதை அறிந்து, போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பார்சலுக்குள் இரண்டு ஜோடி ஜீன்ஸுக்குள் ஏராளமான சிம் கார்டுகளை அடைத்து வைத்திருப்பவது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட அஜய் குமார், ஹாங்காங்கில் உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரிந்ததாகவும், அங்கு கால் சென்டரில் வேலை செய்வதாகக் கூறிய சிலரைச் சந்தித்ததாகவும் காவல்துறையினரிடம் கூறியுள்ளார். அவர் நாடு திரும்பியதும் ஹாங்காங்கில் இருந்து அவரைத் தொடர்பு கொண்டு இந்திய சிம் கார்டுகளை கூரியர் மூலம் அனுப்பச் சொன்னார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு சிம் கார்டுக்கும் 150 ரூபாய் கமிஷன் தருவதாக உறுதியளித்தனர் என்றும் போலீசாரிடம் அஜய் குமார் கூறியிருக்கிறார்.

சிம் கார்டுகள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இயங்கும் சைபர் மோசடி கும்பல்ககளுக்கு அனுப்ப இருந்தவையா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிம் கார்டு விதிகள்

* ஒரு ஆதார் அட்டையில் ஒன்பதுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வைத்திருந்தால், அவர்களுக்கு முதல் முறை ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தில் சிக்கினால், ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

* புதிய சிம் கார்டைப் பெறுவதற்கு வேறு யாரேனும் ஒருவரின் அரசு அடையாள அட்டையைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

* சிம் கார்டு வாங்குபவரின் அடையாளச் சரிபார்ப்புக்கு ஆதார் அட்டைகள் போன்ற பயோமெட்ரிக் அடிப்படையிலான ஐடிகளைப் மட்டுமே பயன்படுத்த முடியும்.

click me!