ஆணுறைக்கு அதிக டிமாண்ட்! ஒரே நாளில் வந்த 67 ஆர்டர்! 2023 இல் களைகட்டிய ஆன்லைன் ஷாப்பிங்!

By SG Balan  |  First Published Dec 20, 2023, 10:53 PM IST

கோவிட்-19 பெருதொற்று காலத்துக்குப் பிறகு, நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.


கோவிட்-19 பெருதொற்று காலத்துக்குப் பிறகு, ஆன்லைனில் மளிகை ஷாப்பிங் அதிகரித்துள்ளது. பலர் ஆன்லைன் ஸ்டோர்களில் மளிகை பொருட்கள் வாங்குகிறார்கள். நாட்டின் ஐந்து முக்கிய நகரங்களில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் 67 ஆர்டர்களைச் செய்துள்ளார். சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் காபி, ஜூஸ், குக்கீஸ், நாச்சோஸ் மற்றும் சிப்ஸ் என ரூ.31,748 க்கு ஒரு ஆர்டர் செய்துள்ளார். டெல்லியில் ஒரு ஆர்டரில் சிப்ஸ், சாக்லேட்டுகள், குக்கீஸ் என 99 பொருட்கள் இருந்தன.

Tap to resize

Latest Videos

வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி ஆகியவை அதிகமாக ஆர்டர் செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களாக உள்ளன. நெயில் பாலிஷ் ரிமூவர், ஷேவர் போன்ற பொருட்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர். தீபாவளி மாதமான நவம்பரில் ஏர் பியூரிஃபையருக்கான தேடல் 3233% அதிகமாகியுள்ளது. தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் மட்டும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஏர் பியூரிஃபையர்கள் விற்பனையாகியுள்ளன.

பெங்களூர் மாம்பழ ஆர்டர்களில் மும்பை மற்றும் ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. செப்டம்பரில் ஆணுறை ஆர்டர்கள் அதிகரித்துவிட்டன. வெங்காயம், வாழைப்பழம் மற்றும் சிப்ஸ் வகைகள் அடிக்கடி ஆன்லைனில் வாங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு, 1.3 மில்லியன் ஆர்டர்களுடன் மக்கானா மிகவும் பிரபலமான சிற்றுண்டியாக இருந்தது. பால், தயிர் மற்றும் வெங்காயம் ஆகிய மூன்றும் தேடல் அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. டெலிவரி ஏஜெண்ட்கள் மொத்தம் 29,95,13,538 கி.மீ. பயணம் செய்துள்ளனர். இது உலகத்தை 1198 முறை சுற்றி வந்ததற்கு சமம்!

நவம்பர் 19 அன்று, நாடு முழுவதும் 1,39,874 சிப்ஸ் பாக்கெட்டுகள் டெலிவரி செய்யப்பட்டன. அக்டோபர் 15 ஆம் தேதி 1,90,418 பால் ஆர்டர்கள் விநியோகிக்கப்பட்டன. ஆகஸ்ட் 12ஆம் தேதி, நாடு முழுவதும் 5,893 ஆணுறைகள் டெலிவரி செய்யப்பட்டன. செப்டம்பர் 6ஆம் தேதி 21,591 வெண்ணெய் பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. அக்டோபர் 2ஆம் தேதி 82 டன் தக்காளி விற்பனையானது. மே 21ஆம் தேதி 36 டன் மாம்பழங்கள் விற்கப்பட்டன. ஜூலை 30ஆம் தேதி, ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்கள் 61 டன் வெங்காயத்தை ஆர்டர் செய்துள்ளனர். நூடுல்ஸ் பாக்கெட்டை வெறும் 65 வினாடிககளில் டெலிவரி செய்து, அதிவேக டெலிவரி செய்த பெருமையை டெல்லி பெற்றுள்ளது.

click me!