செட்டில்மென்ட் தொகையில் 630 மில்லியன் டாலர் வாடிக்கையாளர்களுக்கும் 70 மில்லியன் டாலர் மாகாண நிர்வாகங்களுக்கும் செலுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
ஆண்டிராய்டு ஆப் ஸ்டோர் சந்தையில் கூகுள் பிளேஸ்டோரின் ஆதிக்கத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை முடித்து வைக்க 700 மில்லியன் டாலர் தொகையைச் செலவு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுனவம் பிளேஸ்ரோடுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 50 அமெரிக்க மாகாணங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இந்தத் தொகையை வழங்க இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கும், மாகாண அரசுகளுக்கும் இந்தத் தொகையைச் செலுத்த உள்ளது.
undefined
2021 ஆம் ஆண்டில், யு.எஸ். ஸ்டேட் அட்டர்னி ஜெனரல், டெவலப்பர்கள் தங்கள் செயலிகள் பயனர்களைச் சென்றடைய கூகுள் ப்ளே ஸ்டோரைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்றும் இதனை உறுதி செய்ய, கூகுள் போட்டியாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கான தந்திரங்களைப் பயன்படுத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும், கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோர் பேமெண்ட்களில் 30% வரை தானே எடுத்துக்கொள்கிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. கிட்டத்தட்ட 21 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு செயலிகளின் விலைகளை கூகுள் உயர்த்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், எதிர்த்தரப்பினருக்கு 700 மில்லியன் டாலரை வழங்கி வழக்கைத் தீர்த்து வைக்க ஆல்ஃபபெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த செட்டில்மென்ட் தொகையில் 630 மில்லியன் டாலர் வாடிக்கையாளர்களுக்கும் 70 மில்லியன் டாலர் மாகாண நிர்வாகங்களுக்கும் செலுத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்த செட்டில்மெண்டின்படி, டெவலப்பர்கள் மாற்று பில்லிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம், ஆண்ட்ராய்டில் எளிதாக சைட்லோடிங் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பேமெண்ட்களில் டெவலப்பர்கள் அளிக்கும் கமிஷன் 4 சதவீதம் குறையும்.
இதேபோல கடந்த ஆண்டு, சிறிய ஆப் டெவலப்பர்களுக்கு கூகுள் 90 மில்லியன் டாலரைச் செலுத்தி, அவர்கள் தொடர்ந்து வழக்குகளைத் தீர்த்து வைத்தது நினைவூட்டத்தக்கது.
30 நாட்கள் வேலிடிட்டி.. 48 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் பிளான் இருக்கா..