ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத்..எப்புட்றா.! எலான் மஸ்க்கை ஓடவிட்ட நெட்டிசன்கள்

Published : Apr 28, 2023, 03:03 PM IST
ட்விட்டரில் ப்ளூ டிக் வாங்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத்..எப்புட்றா.! எலான் மஸ்க்கை ஓடவிட்ட நெட்டிசன்கள்

சுருக்கம்

முன்னாள் ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மணீஷ் மகேஸ்வரி எலான் மஸ்குக்கு எழுப்பிய கேள்வி ட்ரெண்டாகி வருகிறது.

முன்னாள் ட்விட்டர் இந்தியாவின் தலைவர் மணீஷ் மகேஸ்வரி ப்ளூ டிக் குறித்து எலோன் மஸ்க்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மணீஷ் மகேஸ்வரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மறைந்த இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ட்விட்டர் சுயவிவரம் எப்படி மொபைல் எண்ணைச் சரிபார்க்கும் போது, ப்யூ டிக் மூலம் சரிபார்க்கப்பட்டது” என்று கேட்டார். 

புதிய சரிபார்ப்பு செயல்முறையைப் பற்றி எலான் மஸ்க் மக்களிடம் பொய் கூறுகிறார். மக்கள் தங்கள் தொலைபேசியை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் எடுத்துச் செல்வதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளனர் என்று நக்கலாக கூறியுள்ளார்.

மணீஷ் மகேஸ்வரி ட்விட்டரில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இயக்குநராக/ GM ஆகவும் பின்னர் மூத்த இயக்குனராகவும், நியூ மார்க்கெட்ஸ் என்ட்ரி ஆகவும் பணியாற்றினார். அவர் ப்ளூ டிக் வாங்கவில்லை. எனவே, அவரது சுயவிவரம் ப்ளூ டிக் இழந்தது. மற்றொரு ட்வீட்டில், " ப்ளூ டிக் சுற்றியுள்ள குழப்பத்தை வெளிப்படுத்துவதே தனது நோக்கம்" என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், எம்.எஸ் தோனியில் அவரது நடிப்பை நேசிப்பதாகவும் கூறினார். சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 2020 இல் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து அதிகாரிகள் தற்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு போய் கொண்டிருக்கிறது.

மணீஷ் மகேஸ்வரி மட்டுமல்ல, மற்ற ட்விட்டர் பயனர்களும் ப்ளூ டிக் குறித்து சமூக ஊடக நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். மறைந்த இந்திய தொலைக்காட்சி நடிகர் சித்தார்த் சுக்லா உட்பட இறந்த பிற நபர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் ப்ளூ டிக் அடையாளத்தைப் பெற்றுள்ளனர். மைக்கேல் ஜாக்சன், நடிகர் சாட்விக் போஸ்மேன் மற்றும் NBA வீரர் கோபி பிரையன்ட் போன்ற பிற நபர்களும் இதில் அடங்குவார்கள்.

ட்விட்டர் ப்ளூ சந்தாவால் மட்டுமே ப்ளூ பேட்ஜ் உத்தரவாதம் அளிக்கப்படும் என்று ட்விட்டர் கண்டிப்பாகக் குறிப்பிடுகிறது. இது இந்தியாவில் மாதத்திற்கு ரூ.900 என்ற கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஃபோன் எண்களைச் சரிபார்ப்பதும் செயலில் அடங்கும். ஆனால், மஸ்க்கிற்குச் சொந்தமான ட்விட்டர் தளத்தில் உயர் கணக்குகளைத் தக்கவைக்க அதன் சொந்த விதிகளை மீறுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

சுயவிவரத்தில் இலவச ப்ளூ டிக் பெறுவதில் எல்லா பயனர்களும் மகிழ்ச்சியடையவில்லை. ட்விட்டர் புளூ சந்தா பணத்தை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு மஸ்க் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் ஸ்டீபன் கிங் கூறினார்.  இந்திய மெகாஸ்டார் அமிதாப் பச்சன் தனது சுயவிவரத்தில் ட்விட்டர் ப்ளூ டிக்கைத் தக்கவைத்துக்கொள்ள ட்விட்டர் ப்ளூவுக்கு பணம் செலுத்தியவர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..2050ல் பெங்களூருவில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும்.. அப்போ காவேரி ஆறு என்னவாகும்? அதிர்ச்சி தகவல்

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிளிப்கார்ட் இயர் எண்ட் சேல்: ரூ.14,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 10! வாடிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!
அனுமதி இல்லாமல் போட்டோவை பயன்படுத்தினால் சிறை?.. டீப் ஃபேக் மசோதா சொல்வது என்ன? முழு விவரம் இதோ!