ஹை ஸ்பீடு இன்டர்நெட் வழங்க கூகுள் தாராவுடன் கைகோர்க்கும் ஏர்டெல்! ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆப்பு தான்!

By SG Balan  |  First Published Dec 12, 2023, 5:38 PM IST

2016ஆம் ஆண்டில் கூகுள் தாரா திட்டம் உருவானது. இந்த தொழில்நுட்பம் மூலம் மெல்லிய கண்ணுக்கு தெரியாத கற்றைகளின் வடிவத்தில் டேட்டாவை வேகமாக அனுப்பவும் பெறவும் முடியும் .


இந்திய தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் ஜியோவுக்குப் போட்டியாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளது. கூகுள் தாரா (Google Taara) உடன் இணைந்து ஏர்டெல் வழங்கும் சேவை ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கூகுள் உருவாக்கிய லேசர் இன்டர்நெட் தொழில்நுட்பம் தான் கூகுள் தாரா. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்க்குச் சொந்தமான எக்ஸ் ஆய்வகத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேசர் இன்டர்நெட் தொழில்நுட்பம் 20Gbps வேகத்தில் டேட்டாவை அனுப்பும் ஒளி கற்றைகளை பயன்படுத்துகிறது.

Tap to resize

Latest Videos

2016ஆம் ஆண்டில் கூகுள் தாரா திட்டம் உருவானது. இந்த தொழில்நுட்பம் மூலம் மெல்லிய கண்ணுக்கு தெரியாத கற்றைகளின் வடிவத்தில் டேட்டாவை வேகமாக அனுப்பவும் பெறவும் முடியும்.

நெட்பிளிக்ஸ் முதல் ஹாட்ஸ்டார் வரை... கூகுளில் அதிகம் தேடப்பட்ட OTT ஷோ எது? டாப் டென் பட்டியல் இதோ!

லைட் பீம்கள் மற்றும் லிங்க்குகள் தாரா டெர்மினல்களுக்கு இடையே பயணிக்கும் உருவாக்குக்கின்றன. இதனால் அதிவேகமாக தரவுகளை பரிமாறிக்கொள்ள முடியும். ஒளிக்கற்றைகளை இணைக்கவும் சீரமைக்கவும் கண்ணாடிகள் பயன்படுத்தப்படும்.

இந்த தாரா தொழில்நுட்பத்தை ஏர்டெல் தனது 4G மற்றும் 5G சேவைகளுக்கு பயன்படுத்த உள்ளது. ஃபைர் இணைப்புகள் வழங்க முடியாத பகுதிகளுக்கு இந்த தாரா தொழில்நுட்ப இணைப்பை வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தத் தொழில்நுட்பம் மோசமான வானிலை நிலவும் நேரங்களில் சிறப்பாக இருக்காது என்று கூறப்படுகிறது.

ஏர்டெல் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தால், அதிவேக இன்டர்நெட் சேவையில் ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இதை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

டாய்லெட்டில் மைக்கை ஆஃப் செய்ய மறந்த விவேக் ராமசாமி! விழுந்து விழுந்து சிரித்த எலான் மஸ்க்!

click me!