Iphone 12 offer : ரூ. 24 ஆயிரம் பட்ஜெட்டில் ஐபோன் வாங்கனுமா? இந்த சலுகை பற்றி தெரிஞ்சிகோங்க..!

By Kevin Kaarki  |  First Published Mar 18, 2022, 9:38 AM IST

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு அசத்தலான எக்சேன்ஜ் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.


இந்திய சந்தையில் பலரும் வாங்க ஆசை கொள்ளும் ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒன்றாக ஆப்பிள் ஐபோன் இருக்கிறது. எப்படியாவது வாங்கி விட வேண்டும் என பலரும் ஐபோனிற்காக பணம் சேமிக்கும் வழக்கம் கூட இங்கு பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு முன்னணி ஆன்லைன் வலைதளங்களில் அவ்வப்போது அசத்தலான சலுகைகள் அறிவிக்கப்படும். 

அந்த வகையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐபோன் மாடல்களுக்கு அசத்தலான எக்சேன்ஜ் சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவின் முன்னணி ஆப்பிள் விற்பனையாளரான ஆப்டிரானிக்ஸ் ஐபோன் மாடல்களுக்கு எக்சேன்ஜ் சலுகை அறிவித்து இருக்கிறது. சிறப்பு எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ஐபோன் 12 மாடலை ரூ. 24,900 விலையில் வாங்கிட முடியும்.

Tap to resize

Latest Videos

undefined

64GB ஐபோன் 12  மாடலுக்கு ஆப்டிரானிக்ஸ் ரூ. 9 ஆயிரத்து 900 தள்ளுபடி வழங்குகிறது. அதன்படி ஐபோனின் விலை ரூ. 56 ஆயிரமாக மாறி விடுகிறது. இதை அடுத்து தேர்வு செய்யப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 5 ஆயிரம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. கேஷ்பேக் சலுகையை சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 12 விலை ரூ. 51 ஆயிரமாக மாறி விடுகிறது. இதுமட்டுமின்றி பயனர்கள் தங்களின் ஐபோன் 11 மாடலை எக்சேன்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ. 23,100 வரையிலான எக்சேன்ஜ் மதிப்பை பெற முடியும். 

ஐபோன் 11 வைத்திருப்போர் ஐபோன் 12 வாங்கும் பட்சத்தில் எக்சேன்ஜ் சலுகையில் ரூ. 27 ஆயிரத்து 900 மட்டும் செலுத்தினால் போதும். இதுதவிர பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இது ஐபோன் 12 விலையை மேலும் குறைத்து ரூ. 24,900 என மாற்றி விடுகிறது. இத்துடன் ஐபோன் 12 வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான இ வவுச்சர்களும் வழங்கப்படுவதாக ஆப்டிரானிக்ஸ் தெரிவித்து னஉள்ளதஉ.

அமேசான் தளத்தில் புதிய ஐபோன் 13 மாடலின் விலை அமேசான் தளத்தில் ரூ. 74 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 6 ஆயிரம் தள்ளுபடி, பழைய ஐபோன் மாடல்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 15,600 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை ஐபோன் 13 மாடலின் 128GB, 256GB மற்றும் 512GB என மூன்று வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

அமேசானில் ஐபோன் 11 விலை ரூ. 49 ஆயிரத்து 900 என பட்டியலிடப்பட்டு உள்ளது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய ஐபோன் மாடலை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 13 ஆயிரத்து 750 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவை அனைத்தையும் சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 12 விலை ரூ. 32 ஆயிரத்து 150 என மாறி விடுகிறது. 

குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டு இருக்கும் எக்சேன்ஜ் தொகை வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஐபோனின் நிலையை பொருத்து வேறுபடும். 

click me!