LG earbuds: எல்.ஜி. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் எல்.ஜி. டோன் ஃபிரீ FP சீரிஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் விலை ரூ. 13,990 ஆகும். புதிய இயர்பட்ஸ் மாடலில் பெருந்தொற்று காலக்கட்டத்தில் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிக முக்கிய அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் மாடலில் முற்றிலும் புதிதாக யு.வி. நானோ சார்ஜிங் கிரேடில் மற்றும் அல்ட்ரா வயலெட் லைட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இயர்பட்ஸ்-ஐ சுத்தப்படுத்தி அதில் இருக்கும் கிருமிகளை 99.9 சதவீதம் வரை கொன்று குவிக்கும் திறன் கொண்டுள்ளது.
"ALG டோன் ஃபிரீ இர்பட்ஸ் சீரிசில் புதிய மாடல் இயர்போன் புதுமை மிக்க அம்சங்களால் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட் மாடலில் யு.வி. நானோ மற்றும் மெரிடியன் தொழில்நுட்பம் வழஙஅகப்பட்டு இருக்கிறது. ஆரோக்கியம் கலந்த அதிக தரமுள்ள ஆடியோ சாதனங்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த இயர்பட்ஸ் சரியான தீர்வை வழங்கும் என நம்புகிறோம்," என எல்.ஜி. எலெக்டிரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஹாக் ஹூன் கிம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.
இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் தினந்தோரும் ஏற்படும் அதித இரைச்சல் மிக்க சத்தத்தை குறைக்கும் வகையில் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள தலைசிறந்த ANC வெளிப்புறம் ஏற்படும் சத்தத்திற்கு இணையான ஆண்டி-நாய்ஸ் ஏற்படுத்தி வெளிப்புற சத்தத்தை தடுக்கிறது. இதில் உள்ள மேம்பட்ட டிரைவர் சத்தத்தை எளிதில் கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்தி விடும். இதன் மூலம் பயனர்கள் இசையின் ஆழத்தில் மூழ்கி அதனை முழுமையாக ரசிக்க முடியும்.
இது மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு பேலன்ஸ்டு சவுண்ட் வழங்க மேம்பட்ட லிசனிங் மற்றும் பெர்சனல் ஆடியோ எக்ஸ்பீரியன்ஸ் உள்ளிட்ட அம்சங்களை இந்த இயர்பட்ஸ் வழங்குகிறது. மெடிக்கல் கிரேடு சிலிகான் இயர் ஜெல் கொண்டு உருவாக்கப்பட்ட இயர்பட்ஸ் மூன்று வித அளவுகளில் கிடைக்கிறது. இது ஒவ்வொருத்தருக்கும் ஏற்ற வகையில் கச்சிதமாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ட்ரூ இயர்பட்ஸ் வாங்குவோரின் மிகப் பெரும் கவலைகளில் ஒன்று இயர்பட் காணாமல் போனால் என்ன செய்வது என்பதாகவே இருக்கும். பயனர்களின் இந்த கவலையை போக்க எல்.ஜி. நிறுவனம் தனது டோன் சஎயலியில் காணாமல் போன இயர்பட் எங்கு இருக்கிறது என்பதை கண்டறியும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சத்தை செயல்படுத்த கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து எல்.ஜி. டோன் ஃபிரீ செயலியை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.
இந்திய சந்தையில் புதிய எல்.ஜி. டோன் ஃபிரீ FP இயர்பட்ஸ் விலை ரூ. 13,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்போன் சார்கோல் பிளாக் மற்றும் பியல் வைட் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த இயர்பட்ஸ் முன்னணி ஆன்லைன் வலைதளங்கள், எல்.ஜி. அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கும். இதன் விற்பனை தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.