Audi A6 Avant : 700 கி.மீ. ரேன்ஜ் - மாஸ் காட்டும் ஆடி எலெக்ட்ரிக் கார் கான்செப்ட் அறிமுகம்!

By Kevin Kaarki  |  First Published Mar 17, 2022, 5:23 PM IST

ஆடி நிறுவனம் தனது புத்தம் புதிய A6 அவாண்ட் இ-டிரான் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. 


ஆடி நிறுவனம் A6 அவாண்ட் இ-டிரான் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் 2024 ஆம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆடி A6 அவாண்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படவில்லை. எலெக்டிரிக் மாடல்களுடன் கம்பஷன் மாடல்களையும் விற்பனை செய்ய ஆடி முடிவு செய்து இருக்கிறது.

புதிய PPE எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஆடி A6 அவாண்ட் இ டிரான் மாடல் முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இந்த கார் 300 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

Tap to resize

Latest Videos

அளவில் புதிய ஆடி A6 அவாண்ட் இ டிரான் மாடல் 4960mm நீலமாகவும், 1960mm அகலமாகவும், 1440mm உயரமாகவும் இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த அளவீடுகளும் இதன் ICE மாடலுக்கு இணையாகவே உள்ளது. முந்தைய செடான் மாடலை போன்று, புதிய ஆடி A6 அவாண்ட் இ டிரான் மாடல் பிரீமியம் பிளாட்ஃபார்ம் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பிளாட்ஃபார்ம் ஆடி மற்றும் போர்ஷ் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாக்கப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்ம் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் போர்ஷ் மெக்கன் எலெக்ட்ரிக் காரில் முதலில் வழங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆடி  Q6 இ டிரான் மாடலில் வழங்கப்பட இருக்கிறது. ஆடி Q6 இ டிரான் மாடலும் 2023 ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

புதிய ஆடி A6 அவாண்ட் இ டிரான் மாடலில் அளவில் பெரிய சிங்கில் ஃபிரேம் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பவர்டிரெயின், பேட்டரி மற்றும் பிரேக்குகளை குளிர்ச்சியூட்டும் ஏர் இண்டேக்குகள் உள்ளன. இதில் உள்ள ஃபிளாட் ஹெட்லைட் பெசல்கள் பக்கவாட்டு வரை நீள்கின்றன. இந்த மாடலில் டிஜிட்டல் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. மற்றும் டிஜிட்டல் OLED தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் இதில் 22 இன்ச் வீல்கள், சிறிய ஓவர் ஹேங்குகள், ஃபிளாட் கேபின், டைனமிக் ரூஃப் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இவை இந்த காருக்கு அசத்தலான ஸ்போர்ட்ஸ் தோற்றத்தை வழங்குகின்றன. புதிய ஆடி A6 அவாண்ட் இ டிரான் மாடலின் பவர்டிரெயின் பற்றிய விவரங்களை ஆடி முழுமையாக வெளியிடவில்லை. எனினும், இந்த மாடலில் செயல்திறனுக்கு ஏற்ப டுவின் என்ஜின் கான்ஃபிகரேஷன் வழங்கப்படும் என தெரிகிறது.

இதன் டுவின் என்ஜின் கான்செப்ட் அதிகபட்சம் 463 பி.ஹெ்.பி. திறன், 800 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆடி A6 அவாண்ட் இ டிரான் மாடலில் 100 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 700 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க முடியும். மேலும் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர்கள் வரை செல்ல முடியும். இந்த காரை 5 இல் இருந்து 80 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்ய 25 நிமிடங்களே ஆகும். 

click me!