டியர் புள்ளிங்கோ... உங்க அம்மாவை ஹெல்தியா பாத்துக்கோங்க... சிம்பிளா இதை ஃபாலோ பண்ணுங்க!

By SG Balan  |  First Published May 12, 2024, 3:53 PM IST

உங்கள் அம்மா பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி உதவி செய்யலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.


அன்னையர் தினம் அம்மாக்களைக் கொண்டாடவும், நாம் அவர்கள் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறோம் என்று  காட்டவும் சரியான நேரம். உங்கள் அம்மா பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி உதவி செய்யலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் அம்மாவின் ஃபோனில் மருந்து எடுத்துக்கொள்வதற்கான நினைவூட்டலை ரிமைண்டர் மூலம் அமைக்கலாம். இதன் மூலம் அம்மா முக்கியமான மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள உதவலாம்.

Tap to resize

Latest Videos

உங்கள் அம்மாவுக்கு மருந்து தீர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்காக, ரெகுலராக மருந்து விநியோகிக்கும் மருந்துகளை டோர் டெலிவரி செய்யும் சேவையை வழங்கும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தலாம்.

வெறும் 8,499 ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன்! நோக்கியா G42 மொபைலுக்கு பக்கா டீல்!

Android மற்றும் iOS ஆகியவை மருத்துவத் தகவல் அம்சத்தை வழங்குகின்றன. மொபைல் லாக் செய்யப்பட்டு இருந்தாலும் அந்தத் தகவல்களைப் பார்க்கலாம். அவசர காலங்களில் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதை சரியாகக் குறிப்பிட வேண்டும்.

மருத்துவத் தகவலுடன் கூடுதலாக, உங்கள் அம்மாவின் தொலைபேசியில் அவசரகாலத்தில் தொர்புகொள்வதற்கான மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்களையும் பதிவசெய்யலாம். அதன் மூலம் தேவைப்படும்போது சரியான நபரைத் தொடர்புகொள்ள முடியும்.

நீங்கள் அருகிலுள்ள மருத்துவமனை, காவல் நிலையம் அல்லது உங்கள் தந்தையின் எண்ணை ஸ்பீட் டயல் வசதியில் அமைக்கலாம். ஏதாவது அவரசமான துணை தேவைப்படும் சூழ்நிலைகளில் அம்மா ஈசியாக டயல் செய்யலாம்.

நிதி மோசடியில் இருந்து உங்கள் அம்மா பாதுகாப்பாக இருக்க, அவரது மொபைலில் UPI லைட் வசதியை பயன்படுத்துவதைப் பழக்கப்படுத்தலாம். அது பாதுகாப்பாக இருக்கும் அதே நேரத்தில் தேவையான பணம் செலுத்தவும் உதவும்.

ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறிகளான இதயத் துடிப்பு, தூக்க முறைகள் போன்றவற்றை கண்காணிக்க ஸ்மார்ட்வாட்ச் அல்லது ஃபிட்னஸ் டிராக்கரை வாங்கிக்கொடுத்து அணிந்துகொள்ளச் சொல்லுங்கள்.

உங்கள் அம்மா தனியாக இருக்கும்போது வீட்டைக் கண்காணிக்க ஸ்மார்ட் கேமராக்கள் மற்றும் சென்சார்களை நிறுவலாம். ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் தென்படுகிறதா என்று பார்த்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

ஏர்டெல்லை அடிச்சுத் தூக்கும் ரிலையன்ஸ் ஜியோ! வேற லெவலில் புதிய ஃபைபர் பிராட்பேண்ட் பிளான்! 

மோஷன் சென்சார் அடிப்படையிலான விளக்குகளை பயன்படுத்தலாம். நடமாட்டத்தைக் கண்டறிந்தவுடன் தானாகவே எரியத் தொடங்கும் மோஷன் சென்சார் கொண்ட விளக்குகள் இரவு நேரத்தில் வயதானவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள். வீட்டில் இருக்கும்போது அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற வாயஸ் அசிஸ்டெண்ட்களை பயன்படுத்துவது அம்மாவுக்கு சில வேலைகளை எளிமையாக்குவதுடன், பொழுதுபோக்காகவும் இருக்கும்.

உங்கள் அம்மா வசிக்கும் இடத்தை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க தானியங்கி வாக்யூம் கிளீனர்களை வாங்கித்தரலாம். வீட்டை சுத்தம் செய்யும் மாப்ஸ் போன்ற தானியங்கி சாதனங்கள் அம்மா செய்யும் வீட்டு வேலைகளை எளிதாக்கும்.

Mother's Day : நாளை அன்னையர் தினம்.. அம்மாவுக்கு கிப்ட் கொடுக்க விரும்புறீங்களா? இதோ நச்சுனு 4 Tech Gadgets!

click me!