Amazon Great Republic Day sale: சோனி ஹெட்போன்கள், ஸ்பீக்கர்களுக்கு நல்ல ஆஃபர்கள்!

By Dinesh TG  |  First Published Jan 15, 2023, 9:37 AM IST

குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசானில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவித்துள்ள நிலையில், சோனி ஹெட்போன்கள், ஸ்பீக்கர்களுக்கு நல்ல ஆஃபர்கள் உள்ளன.


அமேசான் நிறுவனம் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விற்பனையை அறிவித்துள்ளது. ஜனவரி 19 ஆம் தேதி தொடங்கி,  ஜனவரி 22 ஆம் தேதி வரையில் இந்த ஆஃபர் விற்பனை நடைபெறுகிறது. Amazon Prime உறுப்பினர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே, அதாவது ஜனவரி 18 ஆம் தேதியே ஆஃபர்கள் பெறலாம் அணுகுவதன் மூலம் சிறப்பு சலுகைகளைப் பெறலாம்.

Oppo, Xiaomi, OnePlus, Samsung, Apple, Vivo மற்றும் பல பிராண்டுகள் தயாரிப்புகளுக்கு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக்ஸ், ஆக்சஸரீஸ், கேஜெட்டுகள், ஆடைகள் வாங்க நினைத்தவர்கள் இந்த ஆஃபரை முயற்சிக்கலாம். SBI கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் பட்சத்தில் கூடுதலாக 10 சதவீத உடனடி தள்ளுபடியும் அறிவித்துள்ளது. 

Tap to resize

Latest Videos

அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையின் போது சோனி நிறுவன தயாரிப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட சில சலுகைகள்:

சோனி WH-1000XM4 ஹெட்ஃபோன்கள்

Sony WH-1000XM4 ஹெட்ஃபோன்கள் ₹ 19,900 தள்ளுபடி விலையில் கிடைக்கும் . இது ஓவர் ஹெட் வகை மாடல் ஆகும். புளூடூத் 5.0, டச் கன்ட்ரோல், USB-C போர்ட் ஆகியவை உள்ளன. இந்த ஹெட்ஃபோன்கள் டூயல் கனெக்ட் , இன்பீல்டு மைக்ரோஃபோன்ளுடன் வருகிறது.

சோனி WF-1000XM4 இயர்போன்கள்

Sony WF-1000XM4 இயர்போன்களின் விலை ₹ 3,000 கேஷ்பேக்குடன் ₹ 13,990 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இது 6 மிமீ ஆடியோ டிரைவர்களைக் கொண்டுள்ளது. சார்ஜிங் கேஸுடன் 36 மணிநேரம் நீடித்து உழைக்கும் பேட்டரி உள்ளது. IPX 4 தரச்சான்றிதழ் நீர் பாதுகாப்பு, நாய்ஸ் கேன்சலேசன் வசதியுடன் வருகிறது.

Amazon Great Republic Day: 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்?

சோனி SRS-XG300 ஸ்பீக்கர்

Sony SRS-XG300 ஸ்பீக்கர் ₹ 22,990 விலையில் கிடைக்கும் . இது புளூடூத் இணைப்பு மற்றும் ஸ்டீரியோ இணைப்புடன் வருகிறது. சார்ஜ் செய்வதற்கான USB-C போர்ட்டைக் கொண்டுள்ளது .25 மணிநேரம் வரை நீடித்து உழைக்கும் என்று கூறப்படுகிறது.

சோனி HT-S20R சவுண்ட்பார்

Sony HT-S20R சவுண்ட்பார் ஆஃபர்விற்பனையின் போது ₹ 15,990 விலையில் கிடைக்கும் . இது டால்பி டிஜிட்டல் மற்றும் 400W சக்தி கொண்ட 5.1 சேனல் ஒலிக்கான ஆதரவை வழங்குகிறது.
 

click me!