இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டிவி ஷிப்மெண்டுகள் தொடர்ச்சியாக 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கடந்த வாரம் கவுண்டர்பாயின்ட் தரப்பில் தொழில்துறை குறித்த புள்ளிவிவரங்கள் அறிக்கை வெளியானது. அதன்படி, கடந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி (டிவி) ஷிப்மெண்டுகளானது தொடர்ச்சியாக 33% அதிகரித்துள்ளது. இதனால் டிவி ஷிப்மெண்டுகளின் மொத்த எண்ணிக்கை ஐந்து மில்லியன் யூனிட்களை எட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
'மேக் இன் இந்தியா' மூலம் டிக்சன் தொலைக்காட்சி ஷிப்மெண்டில் முன்னனியில் உள்ளது. அதைத் தொடர்ந்து ரேடியன்ட் உள்ளது. அணியக்கூடிய எலக்ட்ரானிக் பொருட்கள் பிரிவில், ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ ஹெட்செட் (TWS) பிரிவானது உள்ளூர் உற்பத்தியின் அடிப்படையில் முன்னணியில் உள்ளது, அதன் ஷிப்மெண்டில் கிட்டத்தட்ட 37 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது என்று கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கை தெரிவித்துள்ளது.
TWS ஷிப்மெண்ட் பிரிவில் பாரத் FIH முன்னனியிலும், அதைத் தொடர்ந்து பேட்ஜெட்டும் உள்ளது. இதே போல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் ஷிப்மெண்ட், Optiemus முன்னனனி இடத்தில் உள்ளது. இந்த ஷிப்மெண்ட் முன்னேற்றம் தொடர்பாக மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் பிரசீர் சிங் கூறுகையில், "2022 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முதல் ஐந்து உற்பத்தியாளர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிவி ஷிப்மெண்டுகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஸ்மார்ட்வாட்ச்கள், TWS, டேப்லெட்டுகள் மற்றும் நெக்பேண்டுகள் போன்ற பிரிவுகளிலும் உள்ளூர் உற்பத்தி தொடர்ந்து வலுவாக வளர்ந்து வருகிறது.
Airtel வழங்கும் Netflix பிரீமியம் ஆஃபர்! முழு விவரங்கள் இதோ!!
டேப்லெட்கள் பிரிவில், Samsung, Dixon மற்றும் Wingtech ஆகியவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஷிப்மெண்டுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக பங்களித்தன. இருப்பினும், ஸ்மார்ட்வாட்ச் உள்ளூர் உற்பத்தியில் Optiemus ஆதிக்கம் செலுத்தி, 90 சதவீதத்திற்கும் அதிகமான ஷிப்மெண்டுகளில் பங்களித்தது" என்று தெரிவித்துள்ளார். பாரத் எஃப்ஐஎச், பேட்ஜெட், அவிஷ்கரன் மற்றும் ஆப்டிமஸ் ஆகியவை முதல் நான்கு பிராண்டுகளாக இருந்தன. மேலும், ஒட்டுமொத்தமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட TWS ஷிப்மெண்டுகளில் கிட்டத்தட்ட 90 சதவீதம் வரையில் பங்களித்தன.