
கூகுள் தனது பிரபலமான ‘ஜி’ லோகோவை நீண்ட காலத்திற்குப் பிறகு பெரிய மாற்றத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ‘G’ ஐகான் புதிய பிரகாசமான மற்றும் கிரேடியன்ட் நிறங்களுடன் காட்சியளிக்கிறது. இந்த புதிய வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) சகாப்தத்தை பிரதிபலிக்கிறது என்று கூறலாம்.
புதிய ஜி லோகோவில் நான்கு வண்ணங்கள் கலந்துள்ளன. அவை நீலம், சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகும். இந்த வண்ணங்கள் மிக பிரகாசமாகவும், மென்மையான கிரேடியன்டாகவும் உள்ளன. ஒரு தசாப்தத்திற்கு பிறகு, கூகுள் நிறுவனம் லோகோவில் செய்துள்ள இந்த அப்டேட், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உள்ளது.
மே மாதத்தில், கூகுள் தேடல் தளத்தில் இந்த புதிய ஜி ஐகான் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் சில தளங்கள் மற்றும் சேவைகள் மட்டும் பயன்படுத்தப்பட்டாலும், தற்போது இது நிறுவனத்தின் அனைத்து தளங்களிலும், தயாரிப்புகளிலும் பரவியுள்ளது. கூகுள் அதிகாரிகள் கூறியதுபோல், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஐகான், தற்போது அனைத்து முக்கிய தயாரிப்புகளுக்கும் பயன்படுத்தப்படும்.
புதிய லோகோ AI சகாப்தத்தின் பரிணாமத்தை குறிக்கிறது” எனலாம். சமீபத்தில், செப்டம்பர் 27 அன்று கூகுள் தனது 27வது பிறந்தநாளைக் கொண்டாடியது. ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் கேரேஜில் தொடங்கிய ஸ்டார்ட்அப், இன்று உலகளாவிய தொழில்நுட்பம் ஜாம்பவானாக மாறியுள்ளது.
கூகுளின் வரலாறு 1998 ஆம் ஆண்டின் முதல் லோகோ டூடுலுடன் தொடங்கியது. இந்த ஆண்டு, 90களின் நினைவுகளை இணைத்து, AI சாதனைகளையும் கொண்டு, புதிய பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் காட்சிப்படுத்தப்பட்டது.
தேடுபொறியிலிருந்து கிளவுட் கம்ப்யூட்டிங் வரை, AI யின் பல்வேறு சாதனைகள் கூகுளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறு, கூகுல் தனது புதிய லோகோவுடன் தொழில்நுட்ப வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.