ஆண்களுக்கு வழங்கப்படுவதை விட மிகக் குறைவான ஊதியம் தனக்கு வழங்கி வந்ததாகவும் தன்னைவிட தகுதி குறைவான ஆணுக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்பட்டதாகவும் ரோவ் புகார் கூறியுள்ளார்.
கூகுள் நிறுவனம் பாலின பாகுபாட்டுடன் நடந்துகொண்டதற்காக அதன் ஊழியர் ஒருவருக்கு 1 மில்லியம் டாலர் தொகையை இழப்பீடாகச் செலுத்துமாறு நியூயார்க் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூகுள் கிளவுட் இன்ஜினியரிங் இயக்குனராக இருந்த உல்கு ரோவ், கூகுள் நிறுவனம் தன்னிடம் பாலினத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி வெளியில் கூறியபோதும் நிறுவனம் பதிலடி கொடுத்ததாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
கூகுள் குறைந்த ஊதியத்துடன் அதிக அனுபவம் இல்லாத ஆண்கள் பணியில் அமர்த்தப்பட்டதாக ரோவ் கூறியுள்ளார். குறைந்த தகுதியுடைய சக ஆண் ஊழியருக்கு பதவி உயர்வு வழங்குவதற்காக தன்னைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாகவும் ரோவ் குற்றம் சாட்டுகிறார்.
இருப்பினும், கூகுள் ரோவுக்கு மொத்தமாக 1.15 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் நியூயார்க் நகரின் சம ஊதியச் சட்டத்தை மீறியதாக நிரூபிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரோவ் 2017ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினார். அந்த நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு 23 வருட முன் அனுபவமும் பெற்றிருந்தார். ஆண்களுக்கு வழங்கப்படுவதை விட மிகக் குறைவான ஊதியம் தனக்கு வழங்கி வந்ததாகவும் ரோவ் புகார் கூறியுள்ளார்.
ரோவ் விஷயத்தில் நடந்திருப்பது போன்ற வழக்கை கூகுள் இப்போதுதான் முதல் முறையாக எதிர்கொள்கிறது என்று சொல்லப்படுகிறது. முன்னதாக, 2019ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 20,000 கூகுள் ஊழியர்கள் வேலையை ராஜினானா செய்ய முடிவு செய்தனர்.
அத்துமீறிய பாலியல் தொந்தரவு மற்றும் பாலின பாகுபாட்டைக் நிறுவனம் சரியான முறையில் கையாளவில்லை என்று அவர்கள் குறை கூறினர். அப்போது, பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கையை மேம்படுத்துவதாக கூகுள் நிறுவனம் அவர்களுக்கு உறுதி அளித்தது.
சந்தியரான்-3 லேண்டர், ரோவர் வெடித்து சிதறப் போகிறதா? விஞ்ஞானிகள் சொல்வது என்ன?