இனி இஷ்டத்துக்கு Google Pay, Phone Pe பயன்படுத்த முடியாது!

Published : Nov 24, 2022, 06:35 PM IST
இனி இஷ்டத்துக்கு Google Pay, Phone Pe பயன்படுத்த முடியாது!

சுருக்கம்

கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வரம்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் இனி ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் கூகுள் பே பயன்படுத்தலாம் என்பது கட்டுப்படுத்தப்படலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரையில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற UPI வழி பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

குறிப்பாக 1 ரூபாய், 10 ரூபாய் என சில்லறை காசை எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற முறை இருந்து வந்தது. இதனால், பலசரக்கு கடை முதல், டீ கடை வரையில் கூகுள் பே பயன்படுத்துகின்றனர். 

இதனால், ஒவ்வொரு ஆண்டும் பணப்பரிவர்த்னைக்கான கால அளவில் 30 சதவீதம் இடைவெளி இருக்க வேண்டும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வரையறுத்தியது. அந்த வகையில், இந்தாண்டும் கால இடைவெளி நிர்ணயித்து, அதற்கு ஏற்ப பரிவர்த்தனை எண்ணிக்கைகளுக்கு வரம்பிடப்பட உள்ளது.

அதாவது,  PhonePe, Google Pay மற்றும் பிற UPI பயன்பாடுகள் மூலம் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்பது டிசம்பர வரையில் கிடையாது என்று கூறப்படுகிறது. அவ்வாறு UPI செயலிகளை அடிக்கடி பயன்படுத்தும் போது, ஒரு கட்டத்திற்கு மேல் Transaction Failed என்பது போன்ற பிழைச்செய்திகள் வரலாம். 

நீங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளீர்களா? அப்படி என்றால் எச்சரிக்கை!

PhonePe மற்றும் Google Pay போன்ற UPI இயங்குதளங்கள் தற்போது சந்தையில் சுமார் 80 சதவீத பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்துகின்றன. எந்தவொரு UPI செயலிகளையும் அன்லிமிடேட்டாக பயன்படுத்துவதைதத் தவிர்க்கும் பொருட்டு, NPCI நவம்பர் 2022 இல் 30 சதவீத அளவு வரம்பை வழங்குவதற்கான திட்டத்தை அனுப்பியுள்ளது, அதை ஆர்பிஐ அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. 

கூடிய விரைவில் டிஜிட்டல் பணப்பரிவர்தனைகளுக்கு வரம்பிடப்படலாம் என்றும், இதனால், பயனர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கூகுள் பே, ஃபோன் பே போன்றவற்றைப் பயன்படுத்த முடியாது.  தற்போதைய நிலவரப்படி, ​​Paytm, PhonePe மற்றும் Google Pay போன்ற எந்த UPI அடிப்படையிலான செயலிகளிலும் பரிவர்த்தனை வரம்பு என்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!