குறுகலான சாலைகள் மற்றும் மேம்பாலங்களைக் கண்டுபிடிப்பது அலர்ட் செய்யும் AI அணுகுமுறை முதல் EV சார்ஜிங் நிலையங்களைக் கண்டுபிடிப்பது வரை பல வகைகளில் இந்தியப் பயணிகளுக்கு கைகொடுக்கும் என்றும் கூகுள் நிறுவனம் கருதுகிறது.
இந்தியாவில் கூகுள் மேப் (Google Maps) ஆறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை செயற்கை நுண்ணறிவு மற்றும் உள்ளூர் தேவைகளை கருத்தில் கொண்டு பயனர்களின் பயணத்தை அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என கூகுள் கூறுகிறது. இந்த அப்டேட்ஸ் இந்தியப் பயணிகள் எதிர்கொள்ளும் சில பொதுவான சவால்களுக்குத் தீர்வாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
குறுகலான சாலைகள் மற்றும் மேம்பாலங்களைக் கண்டுபிடிப்பது அலர்ட் செய்யும் AI அணுகுமுறை முதல் EV சார்ஜிங் நிலையங்களைக் கண்டுபிடிப்பது வரை பல வகைகளில் இந்தியப் பயணிகளுக்கு கைகொடுக்கும் என்றும் கூகுள் நிறுவனம் கருதுகிறது.
undefined
குறுகிய சாலையைத் தவிர்ப்பது:
கடினமான வழிகளைக் காட்டி மக்களைத் தவறாக வழிநடத்துவதாக கூகுள் மேப்ஸ் மீது அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுகலான பாதைகளில் வழியைக் காட்டி சிக்கலில் மாட்டிவிடுவதாகக் குற்றச்சாட்டுகள் உண்டு. இதைத் தீர்க்க, கூகுள் இப்போது AI-ஐப் பயன்படுத்தி இருக்கிறது. இந்த அம்சம் நான்கு சக்கர வாகனங்கள் குறுகலான சாலைகளை தவிர்க்க உதவுகிறது. செயற்கைக்கோள் படங்கள், ஸ்ட்ரீட் வியூ மற்றும் பிற தரவுகளைப் பயன்படுத்தி, சாலையின் அகலத்தை மதிப்பிடுகிறது. அதற்குரிய வகையில் ரூட்டிங் அல்காரிதங்களைச் சரிசெய்துள்ளது. இந்த அம்சம் முதலில் ஹைதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட எட்டு நகரங்களில் கிடைக்கும். பின்னர் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும்.
டார்க் ஆக்ஸிஜன் என்றால் என்ன? ஆழ்கடலில் 13,000 அடி ஆழத்தில் என்ன நடக்குது? விஞ்ஞானிகள் ஆச்சரியம்!
பாலத்தில் செல்லலாமா?:
கூகுள் மேப்ஸில் மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் மற்றொரு பொதுவான பிரச்சனை மேம்பாலத்தில் செல்லலாமா வேண்டாமா என்ற குழப்பம். இந்தச் சிக்கலைத் தீர்க்க, கூகுள் மேப்ஸ் இப்போது 40 இந்திய நகரங்களில் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மேம்பாலங்களில் பயணிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த அம்சம் பயணத்தின்போது வாகன ஓட்டுநர்களுக்கு வரவிருக்கும் பாலத்துக்குத் தயாராகுமாறு அலர்ட் செய்கிறது.
மெட்ரோ டிக்கெட் முன்பதிவு:
ONDC மற்றும் நம்ம யாத்ரி மூலம் இயக்கப்படும் புதிய மெட்ரோ டிக்கெட் முன்பதிவு அம்சத்தால் கொச்சி மற்றும் சென்னையில் உள்ள பொது போக்குவரத்து பயனர்கள் பயனடைவார்கள். இந்த ஒருங்கிணைப்பு, கூகுள் மேப்ஸ் மூலம் நேரடியாக மெட்ரோ டிக்கெட்டுகளை வாங்கும் வசதியைக் அளிக்கிறது.
ஆபாச வீடியோவைக் காட்டி பெண் டாக்டரிடம் 59 லட்சம் அபேஸ் செய்த சைபர் கிரைம் கும்பல்!
EV சார்ஜிங் ஸ்டேஷன்:
8,000 க்கும் மேற்பட்ட எலெட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் பற்றிய தகவல்கள் கூகுள் மேப்ஸில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதற்காக கூகுள் முன்னணி EV சார்ஜிங் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. பயனர்கள் இப்போது அந்தந்த இடத்தில் அருகில் உள்ள எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையத்தைக் கண்டுபிடிக்கலாம். எந்த வகையான சார்ஜர் தேவை என்பதன் அடிப்படையில் ஃபில்டர் செய்யும் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. கூகுள் மேப்ஸில் இரு சக்கர வாகனங்களுக்கான EV சார்ஜிங் மையங்கள் குறித்த தகவலை வழங்கும் முதல் நாடு இந்தியா என்பதும் கவனிக்கவேண்டிய அம்சம் ஆகும்.
உள்ளூர் பரிந்துரைகள்:
பத்து முக்கிய நகரங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை விசிட் செய்ய உள்ளூர் நிபுணர்களுடன் இணைந்து கூகுள் பரிந்துரைகளை கொடுக்கிறது. இதன் மூலம் பயனர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்துகிறது.
சாலை விபத்து பற்றி புகார் அளிக்க:
சாலை விபத்துகள் பற்றிப் புகார் அளிப்பதற்கும் தகவலைப் பகிர்வதற்கும் எளிதான வசதியை புதிய அப்டேட் வழங்குகிறது. இந்தப் புதிய அம்சம் ஆண்டிராய்டு, ஐ.ஓ.எஸ்., ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றில் கிடைக்கும்.
கூகுள் மேப்பில் வந்துள்ள இந்த அம்சங்கள், இந்திய போக்குவரத்தில் பயணிகளுக்கு ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள உதவுகின்றன.
அகவிலைபடி அப்டேட்! 4% உயர்ந்தால் மொத்த சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? கணக்கிடுவது எப்படி?