கம்ப்யூட்டரில் ஒன்றிற்கும் மேற்பட்ட இன்டர்நெட் பிரவுசர் டேப்களை பயன்படுத்தும்போது, நன்றாக இயங்கிக் கொண்டிருந்த கணினி திடீரென மிக மெதுவாகவிடும். இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில், கூகுள் குரோம் தரப்பில் ஒரு புதிய அப்டேட் வரவுள்ளது.
பொதுவாக அனைவரும் தங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் இன்டர்நெட் பிரவுசர், கூகுள் குரோமை உபயோகிக்கும் போது ஒன்றிற்கும் மேற்பட்ட டேப்களை பயன்படுத்துவது உண்டு. இவ்வாறு பயன்படுத்தும் போது லேப்டாப் மிகவும் மெதுவாக செயல்படும். இன்னும் சிலருக்கு ஸ்கிரீன் அப்படியே ஸ்தம்பித்து ஆஃப் ஆகிவிடும். இதற்கு கூகுள் நிறுவனம் விரைவில் தீர்வு கொண்டு வரவுள்ளது.
இதுதொடர்பாக ஆண்ட்ராய்டு போலீஸ் என்ற இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, கூகுள் நிறுவனம் தற்போது ஒரு புதிய சோதனை முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதன்மூலம் பயனர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட டேபை உபயோகிக்கும் போது, தேவையற்ற டேபை ஸ்னூஸ் ( snooze ) செய்து கொள்ளலாம்.
அதாவது நீங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட டேபை பயன்படுத்தும் போது, மற்ற டேப்களுக்கு இன்டர்நெட் பயன்படாத வகையில் சிறிது நேரம் ஆஃப் செய்து கொள்ளலாம். இது உங்கள் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரின் மெமரி ஸ்டோரேஜை ஃபிரீ செய்து மற்ற வேலைகளை தடையின்றி செய்ய உதவும்.
சிறிய எழுத்துக்களை வாசிப்பதில் சிரமம் உள்ளதா ? உங்களுக்கான சூப்பர் டிப்ஸ்
இந்த புதிய அப்டேட்டில் இரண்டு புதிய அம்சங்கள் உள்ளன. அவை மெமரி சேவர் (Memory Saver ) மற்றும் எனர்ஜி சேவர் மோட் ( Energy Saver Mode ) ஆகும். மெமரி சேவர் என்பது குறைந்த அளவு ரேம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் லேப்டாப்பில் மற்ற பயன்பாட்டிற்காக எவ்வளவு ரேம் ( RAM ) ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் இடம்பெறும்.
எனர்ஜி சேவர் என்பது நீங்கள் அனிமேஷன் அதிகமுள்ள இணையதங்களைப் பார்வையிடும் போது, தேவையற்ற அனிமேஷன்களை தடுத்து நிறுத்தி, உங்கள் பேட்டரி சக்தியின் பயன்பாட்டை குறைத்துவிடும். இதனால் லேப்டாப் பேட்டரி நீடித்து உழைக்கும்.
Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனில் அப்படி என்ன தான் இருக்கு? எதுக்கு இவ்வளவு விளம்பரம்?
கூகுள் குரோமின் இந்த அம்சங்கள் தற்போது Google Chrome Canary எனப்படும் சோதனை தளத்தில் வெளியாகி உள்ளது. விரைவில் இயல்பான குரோம் பயனர்களுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, அடுத்த ஆண்டு முதல் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களில் இனி கூகுள் குரோம் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.