
கூகுளின் ஜெமினி செயலியின் புதிய அப்டேட், பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கூகுள் டீப்மைண்ட் உருவாக்கிய புதிய செயற்கை நுண்ணறிவு (AI) போட்டோ எடிட்டிங் கருவி, தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. இந்தப் புதிய அப்டேட்டை "Going Bananas" என்று கூகுள் குறிப்பிடுகிறது.
புதிய அப்டேட்டில் என்னென்ன அம்சங்கள்?
கூகுளின் கூற்றுப்படி, இந்த புதிய AI போட்டோ எடிட்டிங் கருவி, முந்தைய பதிப்புகளில் இருந்த துல்லியமின்மை போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்துள்ளது.
• படங்களை மறுபரிசீலனை (Reimagine) செய்தல்: உங்களின் செல்லப்பிராணி அல்லது உங்களின் படத்தை ஜெமினிக்கு அனுப்பினால், வேறு சூழல்களில் அல்லது புதிய உடைகளுடன் மாற்றிக் கொடுக்கும்.
• இரண்டு படங்களை ஒன்றிணைத்தல்: இரண்டு வெவ்வேறு படங்களை இணைத்து புதிய படத்தை உருவாக்க முடியும். உதாரணமாக, பூங்காவில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் மற்றும் ஒரு நாய் என இரண்டு படங்களை, ஒரே படத்தில் இணைக்கும்படி கேட்கலாம்.
• வீட்டு அலங்காரத்திற்கு AI: வீட்டை புதுப்பிக்க அல்லது பெயிண்ட் அடிக்க திட்டமிடும் ஹவுஸ் ஓனர்களுக்கு இந்தப் புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜெமினியிடம் சுவர்களுக்கு வண்ணம் தீட்டக் கேட்டு, பின்னர் சோபா அல்லது விளக்கு போன்ற தளவாடங்களை சேர்த்து, அந்த அறை எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்ளலாம்.
பாதுகாப்பை உறுதி செய்யும் கூகுள்
இதற்கிடையில், இந்தியா உட்பட பல நாடுகளில் அதிகரித்து வரும் நிதி மோசடிகள் மற்றும் வைரஸ் தாக்குதல்களைக் குறைக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. இதற்காக, பிளே ஸ்டோரில் தீங்கிழைக்கும் செயலிகள் நுழைவதைத் தடுக்க, டெவெலப்பர்களை முழுமையாகச் சரிபார்க்கும் புதிய சரிபார்ப்பு முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கூகுள் கவனம் செலுத்தி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.