Google நிறுவனத்துக்கு அடுத்த அடி.. மேலும் ரூ.936 கோடி அபராதம் விதித்த மத்திய அரசு!

By Dhanalakshmi G  |  First Published Oct 25, 2022, 7:48 PM IST

கூகுள் நிறுவனத்துக்கு ஏற்கெனவே ரூ.1338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் சில முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, கூடுதலாக 936 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையில், நியாயமற்ற போட்டி முறைகளைப் பின்பற்றுவதாகவும், சர்வதிகார போக்கை கையாள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இதனை கண்டித்து கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கூகுள் நிறுவனத்துக்கு 1338 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய அரசின் போட்டி ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை எடுத்தது. 

இதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது மீண்டும் ஒரு முறைகேடு சம்பவத்தில் கூகுள் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இம்முறை  கூகுள் நிறுவனம் அதன் மார்க்கெட் நிலையை முறைகேடாக பயன்படுத்தி, பேமெண்ட் செயலிகளையும், பேமெண்ட் செயலிகளுக்குள்ளாக கூகுளின் அம்சத்தை புகுத்திடவும் முயற்சி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

Facebook யூஸ் பண்றிங்களா ? உடனே இதை செய்யுங்கள்

இதனைக் கண்டித்து 936 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 1338 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதையும் சேர்த்து மொத்தம் 2274 கோடி ரூபாய் கூகுள் தரப்பில் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் கூகுள்  தரப்பில் விரிவான விளக்கம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Airtel vs Jio vs Vi: எந்த நெட்வொர்க்கில் நல்ல ரீசார்ஜ் ஆஃபர் உள்ளது?

click me!