கூகுள் நிறுவனம் இந்தியாவைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் இந்தியாவில் பணிபுரியும் 450 ஊழியர்களை ஈமெயில் மூலம் பணியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவுறுத்தியுள்ளது.
உலகில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகின்றன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் இந்தியாவில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இந்தியாவில் அந்நிறுவனத்திற்குப் பணிபுரிந்துவந்த 453 பேர் வேலையை பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஏற்கெனவே கடந்த ஜனவரி 20ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் மாபெரும் பணிநீக்க அறிவிப்பு வெளியானது. தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் அறிவித்தார். இதனால், அப்போது #googlelayoffs என்ற ஹேஷ்டேக் மிகவும் பிரபலமானது.
Coca-Cola 5G ஸ்மார்ட்போன் எப்படி இருக்கு? நம்பி வாங்கலாமா?
“எங்கள் நிறுவனத்துக்காக கடுமையாக உழைத்த திறமை வாய்ந்த ஊழியர்களுக்கும் விடை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவத்தை அளித்தது. ஆனால் அவர்களுக்கு விடைகொடுப்பதற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம்” என்றும் கூகுள் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்போது மீண்டும் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களுக்கு அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவது பற்றி கடந்த வியாழக்கிழமை இரவு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் தலைவராக உள்ள சஞ்சய் குப்தாவும் வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
iPhone 15 Pro முதல் பார்வை வெளியீடு! டைப் ‘சி’ சார்ஜர் வந்துவிட்டது, ஆனால்…