iPhone 15 Pro முதல் பார்வை வெளியீடு! டைப் ‘சி’ சார்ஜர் வந்துவிட்டது, ஆனால்…

By Asianet TamilFirst Published Feb 18, 2023, 5:01 PM IST
Highlights

ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதில் எந்த விதமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து இங்குக் காணலாம்.

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ இந்த ஆண்டு செப்டம்பரில் மற்ற மாடல்களுடன் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதற்கு முன்னதாக இப்போதே ஐபோன் 15 ப்ரோவின் தோற்றம், முதல் பார்வை வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கடந்த மாதம் தொடக்கத்தில் ஐபோன் 15 பற்றிய விவரங்கள் வந்தன. அதன்படி, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆனது, இதற்கு முன்பு வெளியான ஐபோன்களைக் காட்டிலும் மெலிதான பெசல்களைக் கொண்டுள்ளன. வளைந்த டிஸ்ப்ளே அமைப்பை  கொண்டிருக்கும். தற்போது ShrimpApplePro என்பவர் ஐபோன் 15 ப்ரோவின் தோற்றம் குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, மேற்கண்ட விஷயங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இதுவரையில் ஐபோனில் சார்ஜருக்காக லைட்னிங் போர்ட் இருந்து வந்தது. ஐபோன் 15 ப்ரோ போனில் லைட்னிங்குக்கு பதிலாக USB போர்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான மாற்றமாகும். இன்னும் சொல்லப்போனால் கடந்த பத்து ஆண்டுக்கும் மேலாக லைட்னிங் போர்ட் தான் இருந்து வந்தது. அது இப்போது முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. 

மற்றொரு மாற்றம் ஐபோன் 12 சீரிஸிலிருந்து வந்த தட்டையான விளிம்பு வடிவமைப்பு தற்போது மாற்றப்பட்டுள்ளது. கண்ணாடி, பிரேம் இரண்டும் விளம்புகளைச் சந்திக்கும் இடத்தில் வளைந்து காணப்படுகிறது. இந்த வளைந்த அமைப்பு கையில் பிடித்திருக்க வசதியாக இருக்க உதவும்.

பின்புறத்தில் உள்ள கேமரா பம்ப் கடந்த ஆண்டு மாடலில் இருந்ததை விட தடிமனாக வளர்ந்துள்ளது. இதுவும் வருடாவருடம் மீண்டும் மீண்டும் பார்க்கிறோம். ஆப்பிள் கேமராக்களில் உள்ள சென்சார்களின் தரம் அதிகமாக இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

இப்படி செய்தால் போதும்.. உங்கள் ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம்!

ஐபோன் 14 ப்ரோவுடன் ஒப்பிடும்போது முன்பக்க பெசல்களானது, ஐபோன் 15 ப்ரோவில் குறிப்பிடத்தக்க அளவில் சுருங்கியுள்ளன. ஃபோனின் பக்கத்தில் வால்யூம் பட்டன்களிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, தற்போது வெளிவரவுள்ள ஐபோன் 15 ப்ரோ போனில் வால்யூம் பட்டன் இல்லாத வகையில்பார்க்கலாம். மியூட் ஸ்விட்ச் சிறிய ரவுண்டர் டிசைனுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

click me!