OIS கேமரா, 120W சார்ஜிங் வசதியுடன் iQOO Neo 7 ஸ்மார்ட்போன் அறிமுகம்!

By Asianet Tamil  |  First Published Feb 16, 2023, 5:40 PM IST

இந்தியாவில் iQOO Neo 7 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, இதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.


கடந்தாண்டு ஐக்யூ நிறுவனம் iQOO Neo 6 என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதிதாக iQOO Neo 7 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதுவும் கிட்டத்தட்ட ஐக்யூ நியோ 6 ஸ்மார்ட்போன் போலவே உள்ளது. இருப்பினும் தொழில்நுட்ப ரீதியாக ஒரு சில மாறுபாடுகளைக் கொண்டுள்ளது. 

iQOO Neo 7 இப்போது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரியுடன் வருகிறது. மீடியா டெக் மூலம் மேம்படுத்தப்பட்ட SoC பிராசசர் உள்ளது. இதற்கு முன்னதாக Neo 6 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசசர் இருந்த நிலையில், தற்போது நியோ 7 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமன்சிட்டி 8200 SoC பிராசசர் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்தியாவில் iQOO Neo 7 விலை மற்றும் ஆஃபர்கள்:

iQOO Neo 7 புதிய வண்ணங்களில் வருகிறது. இன்டர்ஸ்டெல்லர் பிளாக் அல்லது ஃப்ரோஸ்ட் ப்ளூ வண்ண டிசைன்களில் போன் உள்ளது. இதற்கு முன்பு கருப்பு நிறம் இருந்த நிலையில், தற்போது லேசாக நீலமாகத் தெரிகிறது. இந்தியாவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி  மெமரி ஸ்மார்ட்போன் அடிப்படை மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.29,999 ஆகும். 

இதேபோல் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.33,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வங்கிகள் மூலமாக ஐக்யூ நியோ 7 ஸமார்ட்போனை வாங்கினால் ரூ.1,500 உடனடி தள்ளுபடி பெறலாம். இந்தியாவில் இதன் விற்பனை இன்று மதியம் 1 மணி முதல் தொடங்கியுள்ளது.

49 ஆயிரம் ரூபாய்க்கு நோக்கியா போன் அறிமுகம்! அப்படி என்ன இருக்கு இதுல?

iQOO Neo 7 சிறப்பம்சங்கள்:

  • ஸ்மார்ட்போன் பெயர்: iQOO Neo 7 
  • திரை அளவு: 6.7 இன்ச் டிஸ்ப்ளே 
  • பிக்சல்: FullHD+ (2400x1080 பிக்சல்கள்) 
  • ரெப்ரெஷ் ரேட்: 120Hz, 300Hz டச் சாம்பிளிங்
  • டிஸ்ப்ளே HDR 10+ சான்றிதழையும், ப்ளூ லைட் சான்றிதழையும் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
  • பிராசசர்: மீடியாடெக் டிமன்சிட்டி 8200 SoC 
  • ரேம்: 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
  • கேமரா: OIS தொழில்நுட்பத்துடன் 64MP பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டூயல் கேமரா உள்ளது. அல்ட்ரா வைட் கேமரா இல்லை. 
  • பேட்டரி: 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஏற்ப 120W சார்ஜிங்

கூடுதல் அம்சங்கள்: ஸ்மார்ட்போனை அதிகப்படியாக பயன்படுத்தும் போது, அது சூடாகாமல் குளிர்ச்சியாக வைத்திருக்க, பல அடுக்கு கிராஃபைட் தாள்கள் உட்பொதிக்கப்பட்டுள்ளன.  நியோ 7 ஸ்மார்ட்போனில் கிட்டத்தட்ட 11 வகையான 5ஜி பேண்டுகள் உள்ளன. எனவே, பல்வேறு இடங்களில் உள்ள 5ஜி நெட்வொர்க் பெற முடியும்.
 

click me!