Coca-Cola 5G ஸ்மார்ட்போன் எப்படி இருக்கு? நம்பி வாங்கலாமா?

By Asianet Tamil  |  First Published Feb 18, 2023, 9:52 AM IST

ரியல்மி நிறுவனம் அண்மையில் Realme 10 Pro 5G Coca-Cola Edition என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன, இதை வாங்கலாமா என்பது குறித்து இங்குக் காணலாம்.


ரியல்மி நிறுவனம் இளைஞர்களை கவரும் வகையில் கொக்க கோலாவுடன் கைகோர்த்து, Relame 10 Pro கொக்க கோலா பதிப்பை அண்மையில் அறிமுகம் செய்தது.  இந்தியாவில் Realme 10 Pro Coca-Cola விலை ரூ.20,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் மாடலின் விலையாகும். இதற்கு முன்பு வெளியான ரியல்மி 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,999. அதே போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,999. எனவே, கொக்கக் கோலா போனைப் பொறுத்தவரையில் சுமார் ஆயிரம் ரூபாய் அதிகமாகும்.

Realme 10 Pro Coca-Cola ஸ்மார்ட்போன் டிசைன்:

Tap to resize

Latest Videos

undefined

போனின் வெளிப்புறத்தோற்றம், போனில் உள்ள தீம்கள் ஆகியவற்றில் கொக்க கோலா பிராண்டின் வடிவம் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு தான். இந்த ஒரு புதிய வடிவமைப்பைத் தவிர, வேறு எதுவும் பெரியதாக மாற்றங்கள் இல்லை. Realme 10 Pro மற்றும் Realme 10 Pro Coca-Cola இரண்டிலும் உள்ள அம்சங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன.

Realme 10 Pro Coca-Cola ஸ்மார்ட்போனில் உள்ள நல்ல விஷயம்:

  • வேடிக்கையான, நல்ல டிசைனுடன் கூடிய கோகோ கோலா லோகோ, தோற்றம் உள்ளது. 
  • பேக்கேஜிங் முதல் சார்ஜிங் அனிமேஷன் வரை கொக்க கோலாவுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பிரகாசமான டிஸ்ப்ளே உள்ளது.
  • அதிக சக்தி கொண்ட, வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரி

Realme 10 Pro Coca-Cola ஸ்மார்ட்போனில் உள்ள குறைபாடுகள்:

  1. மிதமான செயல்திறன்
  2. டெலிஃபோட்டோ, அல்ட்ரா-வைட் கேமராக்கள் இல்லை
  3. குறைந்தளவு யூனிட்கள் தான் சந்தையில் உள்ளன

ரேட்டிங்: 

  • அழகியல் தோற்றம் - 4.5/5 
  • செயல்திறன் - 3.5/5
  • நிலைத்தன்மை / பழுதுபார்ப்பு தன்மை - 2/5
  • கொடுத்த பணத்திற்கு வொர்த் - 4.5/5

49 ஆயிரம் ரூபாய்க்கு நோக்கியா போன் அறிமுகம்! அப்படி என்ன இருக்கு இதுல?

முடிவுகள்: 

இது முழுக்க முழுக்க இளைஞர்களை கவரும் வகையிலான டிசைனுடன் பளபளப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே டிரெண்டிங்கான ஸ்மார்ட்போன் வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இந்த கொக்க கோலா ஸ்மார்ட்போன் ஏற்றதாகவும். மற்றபடி இதற்கான விலைக்கு, இதை விட நல்ல செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களும் உள்ளன.
 

click me!