இனி இந்த தளத்தில் Google Chrome வராது! உடனே என்னனு பாருங்க!!

By Dinesh TG  |  First Published Oct 26, 2022, 11:10 AM IST

Google Chrome சேவையானது இனி Windows 7 இயங்குதளத்தில் இயங்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்டோஸ் இயங்குதள வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது விண்டோஸ் 7 இயங்குதளம். கடந்த 2009 ஆம் ஆண்டு விண்டோஸ் 7 அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10, விண்டோஸ் 11 எல்லாம் வந்து விட்டது. ஆனாலும், இன்று வரையில் பலரும் விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இனி கூகுள் குரோம் பிரவுசர் தனது சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, விண்டோஸ் 7, 8 இயங்குதளத்துக்கான குரோம் அப்டேட் ஒன்று மட்டும் தான் வரும். இந்த அப்டேட் பிப்ரவரி 7 ஆம் தேதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு எந்த அப்டேட்டும் வராது. 

Latest Videos

undefined

அதாவது, விண்டோஸ் 7 தளத்தில் இனி கூகுள் குரோம் ஆனது பெயரளவில் மட்டும் தான் இருக்கும். வைரஸ் இணையதளங்கள் இருந்தாலோ, அல்லது வேறு ஏதும் சிக்கலான வலைதளம் சென்றாலோ, கூகுள் குரோம் அவற்றை தடுத்து நிறுத்தாது. எனவே, நீங்கள் இன்னும் பழைய இயங்குதளத்தையே பயன்படுத்தியிருந்தால், முடிந்த வரையில் அடுத்த விண்டோஸ்க்கு மாறுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. 

Google நிறுவனத்துக்கு அடுத்த அடி.. மேலும் ரூ.936 கோடி அபராதம் விதித்த மத்திய அரசு!

இதன்மூலம் உங்கள் கணினயில் பாதுகாப்பு அம்சங்களுக்கான அப்டேட்டுகளைப் பெறவும், சமீபத்திய Chrome அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். ஏற்கெனவே பல மென்பொருள்கள், பிரவுசர்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக பிரபல ‘இன்டர்நெட் எக்ஸ்ப்ளோளர் கடந்த ஜூன் மாதத்தோடு தனது சேவையை நிறுத்திக் கொண்டது. அதற்குப் பதிலாக மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இதேபோல் பிரபல மென்பொருள்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதால், அதற்கு ஏற்ப பயனர்களும் தங்களது கணினியைப் புதுப்பித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். 

click me!