WhatsApp Auto Reply: அடேங்கப்பா வாட்ஸ்அப்பில் இப்படியெல்லாமா கூட பண்ணலாம்?

By Dinesh TG  |  First Published Oct 26, 2022, 5:51 AM IST

பிரபல சேட்டிங் தலமான வாட்ஸ் அப்பில் உங்களுக்கு தெரியாத பல அட்டகாசமான அம்சங்கள் உள்ளன.  அதில் டாப் 3 ட்ரிக்ஸை  இங்கே காணலாம்.


இதில் உள்ள சில டிப்ஸிற்கு மூன்றாம் தரப்பு ஆப்கள் தேவைப்படும். சிலவற்றிற்கு அவை தேவைப்படாது. மொத்தத்தில் அனைத்து டிப்ஸும் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் வேடிக்கை மிகுந்ததாக இருக்கும்.

1. உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தெள்ளத் தெளிவாக உங்கள் ஸ்டேட்ஸில் அப்டேட் செய்து கொள்ளலாம் :

Tap to resize

Latest Videos

சாதாரணமாக ஒரு படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைக்கும் போது, அதன் தரம் குறைந்து காணப்படம். இதை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு நீங்கள் விரும்பும் புகைப்படத்தை செலக்ட் செய்து உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஷேர் செய்து கொள்ளவும். பின் அதிலுள்ள ஷேர் பட்டனை க்ளிக் செய்து அதனை ஸ்டேட்டஸில் அப்டேட் செய்யுங்கள். இதன் மூலம் உங்களது புகைப்படம் தெள்ளத் தெளிவாக காட்சி அளிக்கும். இதற்காக எந்த ஒரு ஆப்பையும் நீங்கள் இன்ஸ்டால் செய்யத் தேவையில்லை.

2. ஆட்டோ ரிப்ளை  செய்யலாம் :

உங்கள் நண்பர்களோ அல்லது உறவினர்களோ உங்களுக்கு குட் மார்னிங், குட் நைட் போன்ற ஒரே மாதிரியான மெசேஜை செய்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு ரிப்ளை செய்ய உங்களுக்கு நேரம் இல்லையா ? கவலை வேண்டாம்.  

உங்கள் மொபைலின் பிளே ஸ்டோரில் உள்ள இந்த ஒரு ஆப் போதும். https://youtu.be/XnD1lUjiY8E என்ற லிங்கை பயன்படுத்தி ஆட்டோ ரிப்ளை சேட் பாட்  ( Auto Reply Chat Bot ) என்ற ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இதில் டீஃபால்ட்டாக சில மெசேஜ்களை பதிவு செய்து வைத்திருப்பர் அதில் உங்களுக்கு தேவையான ரிப்ளை மெசேஜை செட் செய்து கொள்ளுங்கள்.  இதன் பிறகு நீங்கள் பதிவு செய்த மெசேஜிற்கு ஏற்றவாறு  உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் செய்யும் மெசேஜிற்கு அந்த ஆப்பே தானாக ஆட்டோ ரிப்ளை செய்து விடும்.

Facebook யூஸ் பண்றிங்களா ? உடனே இதை செய்யுங்கள்

3. ரகசிய சேட்டிங் செய்து கொள்ளலாம் :

உங்களுக்கு விருப்பமானவர்கள் அல்லது நண்பர்களுடன் ஏதேனும் ரகசியமாக சேட் செய்ய விரும்பினால் உங்களுக்கு இந்த ஆப்  உதவும் . https://youtu.be/XnD1lUjiY8E என்ற லிங்கை பயன்படுத்தி வாட்ஸ் ஸ்பாய்லர் ஆப் (WhatSpoilerApp – Send Spoilers ) என்பதை இன்ஸ்டால் செய்யுங்கள்.
இதனை பயன்படுத்தி நீங்கள் ஏதேனும் ஒரு மெசேஜினை செய்யும் போது உங்களுக்கு எதிர் தரப்பில் இருப்பவர்கள் அதனை ஓப்பன் செய்வதற்கு முன் ஒரு எச்சரிக்கை மணி ஒழிக்கப்படும்.

விரைவில் அறிமுகமாகும் OnePlus 11.. ஆனால்.

இதன் மூலம் இது ரகசியமான மெசேஜ் என்பதை புரிந்து கொள்வார்கள். இதனை அவர்கள் க்ளிக் செய்தாலும் அதிலுள்ள ரகசியம் தெரியாது. அந்த மெசேஜில் உள்ள ரீட் மோர் ( Read More ) என்பதை க்ளிக் செய்தால் மட்டுமே அவர்களால் ஓப்பன் செய்து பார்க்க முடியும்.

click me!