சொதப்பிவிட்டோம்... ஆண்டிராய்டு டாப்லெட்டில் நடந்த தவறு என்ன? சுந்தர் பிச்சை ஓபன் டாக்!

By SG Balan  |  First Published Nov 16, 2023, 6:34 PM IST

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, டேப்லெட்களில் ஆண்ட்ராய்டின் குறைபாடுகளால் நிறுவனத்திற்கு சறுக்கல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளார்.


ஆண்ட்ராய்டு இயங்குதளம் (Android OS) ஸ்மார்ட்போன்களில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் டேப்லெட்டுகளில் ஆண்ட்ராய்டு முத்திரை பதிக்கத் தவறிவிட்டது. இப்போது, பெரிய திரை கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு ஏற்ற வகையில் ஆண்டிராய்டு இயங்குதளத்தை மேம்படுத்த கூகிள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் எபிக் கேம்ஸ் தொடர்பான வழக்கில் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த வழக்கில் கூகுள் தரப்பு வாதத்தை முன்வைத்துப் பேசியிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைர, டேப்லெட்களில் ஆண்ட்ராய்டின் குறைபாடுகளை எடுத்துரைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

"நாங்கள் ஒரு டேப்லெட்டை அறிமுகப்படுத்தினோம். அதில் ஆப்பிளில் உள்ளது போன்ற அனைத்து அவசியமான வசதிகளும் இல்லை. அது ஒரு குறைபாடாக மாறியது. அதுதான் டேப்லெட் சந்தையில் எங்கள் வெற்றியையும் பாதித்தது" என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

ஒரே மாதத்தில் 2 லட்சம் ட்விட்டர் கணக்குகளை காலி செய்த எலான் மஸ்க்!

2019ஆம் ஆண்டில், கூகிள் டேப்லெட் ஹார்டுவேர் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக ஆறிவித்தது. அப்போது, ஏற்கெனெவே தயாரிப்புக் கட்டத்தில் இருந்த இரண்டு டேப்லெட் மாடல்களை ரத்து செய்தது. டேப்லெட் உருவாக்கத்தில் பணிபுரிந்த ஊழியர்களை வேறு திட்டங்களுக்கு மாற்றியதாகத் தகவல்கள் வெளியாயின.

அந்த நேரத்தில், நிறுவனத்தின் முடிவு பற்றி ட்விட்டரில் தெரிவித்த ஹார்டுவேர் பிரிவின் மூத்த அதிகாரியான ரிக் ஆஸ்டெலர், "கூகுளின் ஹார்டுவேர் குழு இனி லேப்டாப் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும். ஆனால் ஆண்டிராய்டு மற்றும் குரோம் குழுக்கள் டேப்லெட் பார்ட்னர்களுடன் இணைந்து செயல்படுவார்கள்" என்றார்.

கூகுள் நிறுவனம் இதுவரை ஒரு டேப்லெட் மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இது தவிர பலவிதமான டேப்லெட்டுகளுக்கு ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் பயன்படுத்தப்படுகிறது.

இது வாய்ஸ் கால் மாதிரி இல்ல... வாட்ஸ்அப்பில் புதிய VOICE CHAT வசதியை எப்படி பயன்படுத்துவது?

click me!