ஒரே மாதத்தில் 2 லட்சம் ட்விட்டர் கணக்குகளை காலி செய்த எலான் மஸ்க்!

By SG BalanFirst Published Nov 15, 2023, 11:10 PM IST
Highlights

அக்போபர் மாதம் அளித்த அறிக்கையில், பல்வேறு குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் ஒரே நேரத்தில் 3,229 புகார்கள் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

எக்ஸ் என்று பெயர் மாறியுள்ள ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் இருந்து அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 2,37,339 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 2,755 கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்கும் வகையில் பதிவிட்டதற்காக நீக்கப்பட்டுள்ளன என்று அந்நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 இன் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் மாதம்தோறும் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, அக்போபர் மாதம் அளித்த அறிக்கையில், பல்வேறு குறை தீர்க்கும் வழிமுறைகள் மூலம் ஒரே நேரத்தில் 3,229 புகார்கள் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, கணக்கு முடக்கப்பட்டதற்கு மேல்முறையீடு செய்து 78 அப்பீல்கள் வந்தன என்றும் அவற்றை பரிசீலனை செய்ததில் 43 கணக்குகள் முடக்கப்பட்டதை ரத்து செய்துள்ளதாகவும் ட்விட்டர் அறிக்கை சொல்கிறது. அக்டோபரில் கணக்கு தொடர்பான பொதுவான கேள்விகளுடன் 53 கோரிக்கைகள் வந்துள்ளன.

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்! 'க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்' ஆப்ஷனில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

இந்தியாவில் இருந்து வரும் பெரும்பாலான புகார்கள் வெறுக்கத்தக்க நடத்தை (1,424) தொடர்பானவை என்று ட்விட்டர் அறிக்கை கூறுகிறது. அதைத் தொடர்ந்து துஷ்பிரயோகம் / துன்புறுத்தல் (917), குழந்தை பாலியல் சுரண்டல் (366), மற்றும் ஆபாசப் பதிவு (231) ஆகியவற்றைப் பற்றிய புகார்கள் அதிகமாக வருகின்றன என்று அந்நிறுவனம் குறிப்பிடுகிறது.

ஆகஸ்ட் 26 மற்றும் செப்டம்பர் 25 க்கு இடையிலான காலகட்டத்தில், ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் 5,57,764 கணக்குகளை நீக்கியது. இதில் 1,675 கணக்குகள் பயங்கரவாதத்தைப் பரப்பும் பதிவுகளுக்காக அகற்றப்பட்டவை. முன்னதாக, ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 25 வரை 12,80,107 கணக்குகள் நீக்கப்பட்டிருந்தன. அதில் 2,307 கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பதிவுகளுக்காக நீக்கப்பட்டவை.

இதற்கிடையில், ட்விட்டர் விதிமுறைகளை மீறியதாகக் கூறி 325,000 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது வன்முறையான மற்றும் வெறுப்புப் பேச்சு, இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பாக கருத்துகளுக்காகவும் பல கணக்குகள் முடக்கப்பட்டன.

15x15x15 ஃபார்முலா தெரியுமா? 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும் ஸ்மார்ட் முதலீட்டுத் திட்டம்!

click me!