வாட்ஸ்அப்பில் பழைய மெசேஜை தேடிப் பிடிக்க புதிய சர்ச் ஆப்ஷன் அறிமுகம்!

By SG BalanFirst Published Nov 11, 2023, 4:48 PM IST
Highlights

இந்த அம்சம் பயனர்கள் குறிப்பிட்ட தேதிகளின்படி பழைய செய்திகளைத் தேட அனுமதிக்கும். இதன் மூலம் பழைய மெசேஜ்களைத் தேடுவது மேலும் எளியாகிறது.

ஆண்ட்ராய்டு பயனர்கள் சாட்களில் பழைய மெசேஜ்களைத் தடுவதற்கு புதிய வழி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது குறிப்பிட்ட தேதியில் பகிரப்பட்ட மெசேஜ்களை மட்டும் தேடுவதற்கான அம்சத்தைக் கொண்டுவர உள்ளது. வாட்ஸ்அப் இந்த வசதியை இப்போது சோதனை முறையில் பீட்டா பயனர்களுக்கு மட்டும் வெளியிட்டுள்ளது. செயல்படுகிறது.

இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் iOS வாட்ஸ்அப் செயலியில் இப்போதைக்குக் கிடைக்காது. ஆனால் ஆண்டிராய்டு மொபைல் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பீட்டா பயனராக இருந்தால், 2.23.24.16 வெர்ஷன் அப்டேட் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

இந்த அம்சம் பயனர்கள் குறிப்பிட்ட தேதிகளின்படி பழைய செய்திகளைத் தேட அனுமதிக்கும். பழைய மெசேஜ்களைத் தேடுவதை மேலும் எளியாகிறது என்றும் தேடலை இன்னும் துல்லியமாக மேற்கொள்ளலாம் என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் கருதுகிறது.

விண்வெளி நிகழ்வுகள் முதல் அனிமேஷன் தொடர் வரை... இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் நாசா டிவி!

பயனர்கள் தேடல் ஆப்ஷனைக் கிளிக் செய்யும்போது, புதிதாக காலண்டர் ஆப்ஷனும் தோன்றும். காலண்டர் ஆப்ஷனைக் கிளிக் செய்த பிறகு, குறிப்பிட்ட தேதியைத் தேர்வு செய்து அந்த நாளில் பகிரப்பட்ட மேசேஜ்களை மட்டும் தேடிப் பார்க்கலாம். இது உரையாடல்களைத் தேடும் செயல்முறையை மிகவும் எளிதாக்கும்.

"தேதி வாரியாக மெசேஜ்களைத் தேடுவதற்கான அம்சம் சோதனைக் கட்டத்தில் உள்ளது. வரவிருக்கும் அப்டேட்டில் இந்த அம்சம் கிடைக்கும்" என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் சேனல் அப்டேட்டுகளை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வசதியும் ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்குக் கிடைத்துள்ளது. இதன்ம மூலம் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட சேனலில் இருக்கும் ஒரு பதிவை எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

ஆப்பிள் முதல் ஓப்போ வரை ஒவ்வொரு பிராண்டிலும் டாப் தீபாவளி ஆஃபர் எது?

click me!