டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் (Disney+ Hotstar) செயலியில் ஒரே நேரத்தில் 5.1 கோடி பேர் ஒரே நேரத்தில் இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்துள்ளனர்.
2023 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இன்று பலப்பரீட்சை நடத்திவருகிறது. இந்தப் போட்டியில் ரன் மிஷின் விராட் கோலி 50வது சதத்தை அடித்து புதிய சாதனை படைத்தார். இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் மொபைல் செயலி ஸ்ட்ரீமிங்கில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
டிஸ்னியின் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் (Disney+ Hotstar) செயலியில் ஒரே நேரத்தில் 5.1 கோடி பேர் ஒரே நேரத்தில் இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்துள்ளனர். கடந்த நவம்பர் 5ஆம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போட்டியின்போது 4.4 கோடி பேர் ஒரே நேரத்தில் பார்த்ததே முந்தைய சாதனையாக இருந்தது. இந்த சாதனையும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
undefined
15x15x15 ஃபார்முலா தெரியுமா? 15 வருடத்தில் ஒரு கோடியாக மாறும் ஸ்மார்ட் முதலீட்டுத் திட்டம்!
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்தியாவின் வளர்ந்து வரும் ஸ்ட்ரீமிங் தளங்களில் முன்னணியில் உள்ளது. கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக பல சாதனைகளை முறியடித்து வருகிறது.
இந்தியாவில் நடைபெறும் ஆண்களுக்கான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை ஹாட்ஸ்டார் மொபைல் பயனர்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறது. சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரையும் இலவசமாகப் பார்வையிட அனுமதித்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜியோ சினிமா ஸ்ட்ரீமிங் தளத்தில் ஐபிஎல் போட்டியை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போட்டியைச் சமாளிக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டாரும் இலவச லைவ் ஸ்ட்ரீமிங் சலுகை அளித்து வருகிறது.
டிசம்பர் 2ஆம் தேதி தொடங்க உள்ள பத்தாவது சீசன் ப்ரோ கபடி லீக் தொடரின் லைவ் ஸ்ட்ரீமிங் சேவையும் அனைத்து மொபைல் பயனர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Explained: ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் இந்தியா இடம்பெறாதது ஏன்?