150 கி.மீ ரேன்ஜ் வழங்கும் ஹீரோ ஸ்பிலெண்டர் எலெக்ட்ரிக்.. விலை எவ்வளவு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 17, 2022, 5:00 PM IST

கோகோ ஏ1 எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் கொண்டு ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலை முழு சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர் வரை செல்ல முடியும்.


ஹீரோ ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட்டை கோகோ ஏ1 எனும் நிறுவனம் உருவாக்கி வருகிறது. கோகோ ஏ1 நிறுவனம் வழங்கும் எலெக்ட்ரிக் கிட் கொண்டு பைக்கை எலெக்ட்ரிக் மாடலாக மாற்றிக் கொள்ள முடியும். கோகோ ஏ1 நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் முழு கட்டணம் ரூ. 95 ஆயிரம் ஆகும். இதே கிட்-ஐ பேட்டரி இல்லாமல் வாங்கும் போது ரூ. 35 ஆயிரத்திற்கு பெற முடியும்.

கோகோ ஏ1 எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் கொண்டு ஹீரோ ஸ்பிலெண்டர் மாடலை முழு சார்ஜ் செய்தால் 151 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். இந்த கிட்-ஐ சாலையில் பயன்படுத்துவதற்கு ஏற்ற RTO ஒப்புதுலை ஏற்கனவே பெற்று இருந்த நிலையில், தற்போது இந்த கிட் ARAI அனுமதியையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த கிட்-ஐ சட்டப்படி பயன்படுத்த முடியும். 

Latest Videos

undefined

எலெக்ட்ரிக் கிட்:

கோகோ ஏ1 கிட் உடன் 2 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 2.8 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரி ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், டிசி டிசி கன்வெர்ட்டர், புது அக்செல்லரேட்டர் வயரிங், கீ ஸ்விட்ச் மற்றும் கண்ட்ரோலர் பாக்ஸ் மற்றும் புதிய  ஸ்விங் ஆர்ம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

ஹீரோ ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிளை மாற்றும் பணிகள் கோகோ ஏ1 வொர்க்ஷாப்களில் மேற்கொள்ளப்படும். இவை நாடு முழுக்க 36 RTO லொகேஷன்களில் கிடைக்கிறது. உள்ளூர் RTO டாக்குமென்டேஷன் நிறைவுற்றதும், கன்வெர்ட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளுக்கு இன்சூரன்ஸ் பெற முடியும். இதன்பின் பச்சை நிற நம்பர்பிளேட் வழங்கப்படும். எனினும், வாகன பதிவு எண் மாற்றப்படாது.

நல்ல முயற்சி:

கோகோ ஏ1 எடுத்து வரும் புது முயற்சி மத்திய அரசின் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கிறது. மோட்டார்சைக்கிளை மாற்றும் போது பேட்டரி பேக் விலை மட்டும் சற்று கூடுதலாக இருக்கிறது. இது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கடும் சவாலான காரியமாக இருந்து வருகிறது. சமீப காலங்களில் பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. 

click me!