தற்போது ஒரு AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட உலக தலைவர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகில் AI என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒரு கணினி மனிதனை போல யோசித்தால் அல்லது மனிதனை போல செயல்படுவதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு உதவுகிறது. ஆனால் இந்த AI தொழில்நுட்பம் மனிதர்களை விட அதிக சக்தி கொண்டதாக உள்ளது. இந்த AI தொழில்நுட்பத்தை உருவாக்கிய மனிதர்களால் கூட அவற்றால் என்னென்ன செய்ய முடியாது என்றும் கூறபப்டுகிறது. எனவே நாட்கள் செல்ல செல்ல உள்ளீடுகள் அதிகளவு கிடைக்கும் போது AI தன்னை தானே மேம்படுத்திக் கொள்ளும்.
மேலும் இந்த தொழிநுட்பம் தவறான நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தற்போது மனிதர்கள் பார்த்து வரும் பல பணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளை வைத்து 1000 டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்கிய குற்றவாளிக்கு என்ன தண்டனை தெரியுமா?
இது ஒருபுறமிருக்க AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட உலக தலைவர்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
World leaders as babies, according to AI
[📹 Planet AI]pic.twitter.com/jT6Gbk9Z4y
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரிடியூ உள்ளிட்ட பலர் குழந்தையாக இருந்தால் எப்படி இருப்பார்கள் என்ற புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டீப்ஃபேக் ஆபாசப் படங்களை உருவாக்குவது கிரிமினல் குற்றம்! பிரிட்டனில் அதிரடி சட்டம்!
Massimo என்ற எக்ஸ் வலைதள கணக்கில் இந்த AI வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்களையும் பெற்றுள்ளது.