
ஒரு மனிதனின் இறுதி சடங்கு என்பது வாழ்கையின் கடைசி சகாப்தம் என்றே கூறலாம். ஆனால் இன்றைய வாழ்கை முறையில் பெற்றோர்கள் ஓரிடமும், பிள்ளைகள் ஓரிடமும் நாடு விட்டு நாடு கடந்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி, சந்தர்பம் சூழ் நிலை காரணமாக, இறுதி சடங்கிற்கு கூட வருகை தர முடியாத இடத்தில உள்ளவர்கள் கூட , இருந்த இடத்திலிருது இறுதி சடங்கை நேரலையாக பார்க்கும் வசதி ஏற்படுத்திதரப்பட்டுள்ளது
சென்னையை பொறுத்தவரை மாநகராட்சியின் கீழ் மின் மயானங்கள் செயல்பட்டு வந்தன. இறுதி சடங்குகள் இலவசம் என்றாலும் புரோக்கர்கள் தொல்லை மற்றும் சரியான பராமரஈபு இல்லாததாலும் அந்த சுடுகாடே சீரழிந்து காணப்படும் நிலையில், சென்னையில் உள்ள மின் மயானங்களை தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்தது.
இதன் அடிப்படையில் சென்னை அண்ணாநகர், வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானம் ஐ.சி.ஓ.டபுள்யூ என்ற என்ஜிஓ-விடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திடம் ஒப்படைத்த பின்னர் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் முதன் முறையாக சுடுகாட்டில் வைபை வசதியை ஏற்படுத்த
திட்டமிட்டு நாளை (15.4.17) முதல் அமல் படுத்த உள்ளது. இதன் மூலம் இறுதி சடங்கிற்கு வர முடியாதவர்கள் இணையத்தின் மூலம் நேரலையாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் இந்தியா என்பது இதுதான் போல....
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.