பிளிப்காரட்டில் ‘பிக் பசாட் தாமால்’ என்ற என்ற பெயரில் சிறப்பு தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு சலுகைகள் உள்ளன.
புத்தாண்டு, பொங்கலுக்கு பிறகு பிளிப்கார்ட்டில் மெகா சேல் என்று பெரிதாக எதுவும் வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் சேவிங் டே சேல் ஆஃபர் இருந்தன. அதன் பிறகு தற்போது அதே ஆஃபர்கள் ‘பிக் பசாட் தமால்’ என்ற பெயரில் மீண்டும் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை இன்று 3 ஆம் தேதி முதல் வரும் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிராண்டுகளிடம் இருந்து, 1 லட்சத்திற்கும் அதிகமான தயாரிப்புகளுக்கு சலுகைகள் உள்ளன. குறைந்த விலை, ஈசி ரிட்டர்ன், இலவச டெலிவரி சேவைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரூ.49, ரூ.99, ரூ.199, ரூ.299, ரூ.499, ரூ.699, ரூ.799, ரூ.999 என்ற வகையில் விலைகளுக்கு ஏற்றவாறு ஆஃபர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், எந்தெந்த விலை வரம்பில், என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை எளிதாக காணலாம்.
இம்முறை முக்கியமாக ஃபேஷன், பியூட்டி மேக்கப், கிச்சன் தயாரிப்புகள், வீட்டு அலங்கார தயாரிப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டு ஆஃபர்கள் இருப்பதாக தெரிகிறது. ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரையில் இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே ஸ்மார்ட்போனின் விலை 7,999 ரூபாய் என்றும், மோட்டோ ஜி62 ஸ்மார்ட்போனின் விலை 15,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போகோ எம்4 ப்ரோ ஸ்மார்ட்போன் 7,999 ரூபாய்க்கும், விவோ T1 ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவையணைத்திலும் வங்கி ஆஃபர்களும் கூடுதலாக இருப்பதாக தெரிகிறது. இதேபோல் வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, சமையல் பாத்திரங்கள், கேட்ஜெட்களும் ஆஃபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
Xiaomi Pad 6, 6 Pro அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின!
ஆண்கள், பெண்களுக்கான ஆடைகள், மரசாமான்கள், பர்னிச்சர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றுக்கும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பலசரக்கு பொருட்கள் சமையல் எண்ணெய் வகைகள், சலவை பொருட்கள், பருப்பு தானிய வகைகள், மாவு வகைகளும் உள்ளன. இந்த ஆஃபர்கள் அனைத்தும் இன்று 3 ஆம் தேதி முதல், 5 ஆம் தேதி வரை என மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.