ரியல்மி நிறுவனம் கொக்கக் கோலா ஸ்மார்ட்போன் தயாரித்து வரும் நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இளையோர்களை கவரும் வகையில், புதுமையானவற்றை கொண்டு வருவதில் ரியல்மி நிறுவனம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், தற்போது ரியல்மி கொக்கக் கோலா எடிசன் ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது.
கொக்கக் கோலா பிராண்ட் பெயருடன் ஸ்மார்ட்போன் வருகிறது என்ற தகவல் வெளியானதும், சமூகவலைதளங்களில் அந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியது. அதன்பிறகு ரியல்மியின் ஸ்மார்ட்போன் தான் சிறிய மேம்பட்ட மாற்றங்களுடன், கொக்கக் கோலா என்ற பெயரில் வெளிவருவது உறுதியானது.
இந்த நிலையில், வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி கொக்கக் கோலா எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று ரியல்மி தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான டீசர்கள் ரியல்மியின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
அதை வைத்து பார்க்கும் போது, ஏற்கெனவே பழக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போனின் டிசைன் தான் இதிலும் உள்ளது. போனின் பக்கவாட்டில் கொக்கக் கோலா என்ற பிராண்டு லோகோ இடம் பெற்றுள்ளது.
ரியில்மியின் கொக்கக் கோலா ஆஃபர்கள்:
ரியல்மியின் கொக்கக் கோலா எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகத்தை முன்னிட்டு, சிறு அளவிலான போட்டிகளும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 200 ரூபாய் மதிப்புள்ள இலவச டிக்கெட் புக்கிங், 3 வாட் ப்ளூடூத் ஸ்பீக்கர், மீடியம் அளவிலான எலெக்ட்ரானிக் டூத் பிரஷ்கள், வாட்சகள், ரியல்மியின் கொக்கக் கோலா தோற்றத்தில் அமைந்துள்ள டிசைன், டீலக்ஸ் பாக்ஸ்செட் ஆகியவை இந்த பரிசு கூப்பன்களில் இடம் பெற்றுள்ளன.
டுவிட்டருக்கு எதிராக புதிய ஆப் உருவாக்கும் முன்னாள் பணியாளர்கள்!
Realme 10 Pro சிறப்பம்சங்கள்:
Realme 10 Pro ஆனது 6.7-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவை 120Hz ரெப்ரெஹ் ரேட், DC டிம்மிங் மற்றும் 680 nits வரையிலான பிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கைரேகை சென்சார் பக்கவாட்டில் உள்ள பவர் பட்டனில் பதிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 695 பிராசசர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆகியவை உள்ளன. ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதியும், அதற்கு ஏற்ப 5,000 mAh சக்தி கொண்ட பேட்டரியும் உள்ளது.
Realme 10 Pro ஆனது 2MP போர்ட்ரெய்ட் கேமராவுடன் 108MP பிரைமரி கேமராவைக் கொண்டுள்ளது, மேலும் முன்பக்கத்தில், ஸ்மார்ட்போனில் 16MP கேமரா உள்ளது. 9 விதமான 5G பேண்டுகள் உள்ளன. இதற்கு முன்பு வெளியான 10 Pro ஸ்மார்ட்போனில் ஏழு 5G பேண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.