180 கி.மீ. ரேன்ஜ் கொண்ட் எலெக்ட்ரிக் பைக்.... டெலிவரி பற்றி சூப்பர் தகவல் வெளியீடு..!

By Kevin Kaarki  |  First Published Apr 10, 2022, 4:00 PM IST

டார்க் கிராடோஸ் இரண்டு வேரியண்ட்களிலும் 4 கிலோவாட் ஹவர் IP67 சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.


டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முதல் யூனிட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. டார்க் கிராடோஸ் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை மிக விரைவில் வினியோகம் செய்யும் பணிகளில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக டார்க் கிராடோஸ் மோட்டார்சைக்கிள் பூனேவில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

டெலிவரி பற்றிய அப்டேட்: 

Tap to resize

Latest Videos

பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான டார்க் மோட்டார்ஸ் வாகன பதிவு மற்றும் டெலிவரி பற்றிய அப்டேட்களை விரைவில் தனது வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் என தெரிகிறது. முன்னதாக டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 1500 டெஸ்ட் ரைடு வாகனங்களை நகரில் வழங்கியது. இந்த நிகழ்வு பூனேவில் நடைபெற்றது. இதில் புது டார்க் கிராடோஸ் மாடலை புக் செய்தவர்கள் கலந்து கொண்டு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை ஓட்டி பார்த்தனர்.

இந்திய ச்த்தையில் புதிய டார்க் கிராடோஸ் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 8 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை அரசு மாணியங்களை சேர்த்தே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். 

முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்:

டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலாக டார்க் கிராடோஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டார்க் கிராடோஸ் மாடலில் 7.5 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 10.05 பி.ஹெச்.பி. திறன், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய டார்க் கிராடோஸ் ஆர் வேரிண்ட் 9 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார் 12.06 பி.ஹெச்.பி. திறன், 38 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டு இருக்கிறது.

டார்க் கிராடோஸ் இரண்டு வேரியண்ட்களிலும் 4 கிலோவாட் ஹவர் IP67 சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 180 கிலோமீட்டர் வரை செல்லும் என டார்க் மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது. 

முதற்கட்டமாக பூனேவில் மட்டும் வினியோகம் துவங்க இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ நாட்டின் மற்ற நகரங்களிலும் டார்க் கிராடோஸ் விற்பனை துவங்கும் என எதிர்பார்க்கலாம். 

click me!