ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓ.எஸ். மற்றும் ஒப்போ கலர் ஓ.எஸ். இணைக்கப்பட்டு, பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஒன்பிளஸ் நிறுவனம் புதிதாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாகவும், இது ஒப்போ ஃபைண்ட் என் போன்றே காட்சியளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஒப்போ நிறுவனம் தனது ஃபைண்ட் என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இன்னோ டே நிகழ்வில் அறிமுகம் செய்தது. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்:
இந்த ஸ்மார்ட்போன் ஃபிளெக்சியன் ஹின்ஜ் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக போன் மிக கச்சிதமாக மூடிக்கொள்ளும் என ஒப்போ தெரிவித்து இருந்தது. இதனால் ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையில், டிஸ்ப்ளேவின் இருபுறங்களிலும் எந்த இடைவெளியும் இடம்பெறாது. ஒப்போ, ஒன்பிளஸ், விவோ மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்கள் சீனாவை சேர்ந்த பி.பி.கே. எலெக்ட்ரானிக்ஸ் எனும் நிறுவனத்தால் இயக்கப்படுகின்றன.
ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனம் ஐந்து ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. எனினும், இதில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இடம்பெற்று இருக்கிறதா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கின்றன.
ஒன்றிணைக்கப்பட்ட ஓ.எஸ்.:
அந்த வரிசையில் ஒப்போ ஃபைண்ட் என் மடிக்கக்கூடிய மாடலின் அம்சங்களும் ஒன்பிளஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் அம்சங்களும் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. சமீபத்தில் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவனங்கள் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்தன. இதோடு ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓ.எஸ். மற்றும் ஒப்போ கலர் ஓ.எஸ். இணைக்கப்பட்டு, பயனர்களுக்கு புதுவித அனுபவத்தை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
விவோ முதல் ஸ்மார்ட்போன்:
இதுதவிர விவோ நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை நாளை (ஏப்ரல் 11) சீன சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 8 இன்ச் மடிக்கக்கூடிய AMOLED பேனல் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் நான்கு பிரைமரி கேமரா சென்சார், 4600mAh பேட்டரி வழங்கப்பட இருப்பதாக இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.